லப்பர் பந்து விமர்சனம்
இந்த படத்தை பாராட்டுறதுக்கு முன்னாடி இந்த படத்தோட கதையை பார்ப்போம்
ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே தன்னோட ஏரியா Team- ல விளையாடுணுமின்னு ஹரிஸ்கல்யாணுக்கு ஆசை, ஒருசமயம் .படிக்கறப்போ ஒரு மேட்ச் பாக்கப்போறாரு ,.அங்க தினேஷின் ஆட்டத்தை மட்டும் பாக்ககாம ,எப்படி Ball போட்டா அவர் Out ஆவாருனு கவனிக்கிறாரு….ஆனா தினேஷ் Super -ஆ விளையாடுறாருன்னு ஊரே கொண்டாடடினாலும் அவரோட மனைவி ஸ்வாசிகாவை பாத்து பயப்படுது ..இது தினேஷுக்கும்தான்.
பலவருடங்கள் கடந்து போக, தினேஷ் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு Daily match விளையாட போறாரு…அவ்ருடைய பொண்ணு ஒரு ஹாஸ்பிடல்ல நர்ஸ் ஆக வேலை பாக்குறாங்க…வாங்குன கடன மட்டும் சமாளிக்கமா, தன்னோட கணவனயும் ,கூடவே குடும்பத்தையும் காப்பாத்துறாங்க ஸ்வாசிகா.கிரிக்கெட் பைத்தியமா இருக்கற ஒத்த புள்ள ஹரிஷ், எப்படியாவது திருத்திவிடமாட்டானா அப்படினு அவரோட அம்மா தேவதர்ஷினி நம்பிக்கையோட காத்துக்கிட்டு இருக்காங்க …எல்லா டீம்லேயும் கலந்துகிட்டு சூப்பராக ஹரிஷ் விளையாடினாலும், தன்னோட டீமில் அவனை விளையாடவைக்கமுடியலேன்னு வருத்தப்படுறாரு காளிவெங்கட் .
இதற்க்கு இடையில எதிர்பாரம சந்திக்கிற ஹரிஷும், சஞ்சனாவும் காதலிக்க ,சஞ்சனாவை பொண்ணு பார்க்க வந்த ஹரிஷ் மேட்ச் விளையாட போக, அப்ப அங்க பல வருடங்கள் கழித்து தினேஷை பார்க்குறாரு.. எதிர்பாராதவிதமாக இரண்டுபேரும் எதிரெதிர் அணியில் விளையாடப்போக, அந்த விளையாட்டு இரண்டு பேரோட வாழ்க்கையில வினயமாக போகுது. அது என்ன? ஏன்?பின்பு அது சரி ஆச்சா?இல்லையா?இதுதாங்க மீதி கதை

தினேஷ் ஹரிஷ் இருவரும் படத்துக்கான அடையாளம் மட்டுமில்லாம, அவங்க, அவங்களோட கதாபாத்திரங்களில் நல்லா நடிச்சி கதைக்கு பலம் சேர்த்து இருக்காங்க ….இந்த கதாபாத்திரத்துல நடிக ஒத்துக்கொண்ட தினேஷுக்கு முதல்ல பாராட்டுக்கள்… அதேபோல ஊர்ல ஒரு இளைஞன் எப்படி இருப்பானோ அப்படியே அந்த கதாபாத்திரமா மாறி இருக்கிறாரு ஹரிஷ்கல்யாண். இவங்க ரெண்டு பேரும் இப்படி நடிப்புல வெளுத்து வாங்க ,தினேஷின் மனைவியாக வரும் ஸ்வாசிகாவும் பிரமாதமா நடிச்சி இருக்காங்க ….எந்த நேரமும் கோபமா இருக்கற அவங்க அடிக்கடி காதலையும் அழகாக வெளிப்படுத்தி இருக்காங்க… சஞ்சனாவின் கதாபாத்திரமும் அதை அவங்க நடித்த விதமும் நன்றாக உள்ளது …எவ்வளவு பெரிய எமோஷன் சீனையும் ரொம்ப இயல்பா ,அளவா வெளிக்கொணரும் வகையில அவங்க நடிச்சு இருக்காங்க …மத்தபடி படத்துல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் காளிவெங்கட், பாலசரவணன் போன்றவர்களுக்கும் பாராட்டுக்கள் .

ஷான் ரோல்டன் இசை, படத்தின் கதையோட இணைந்து பயணிக்கும் வகையில் பொருத்தமாக இருக்கு.. .தினேஷுபுருஷோத்தமனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இணக்கமாக அமைந்துள்ளது.ஒரு நல்ல திரைப்படத்தினை தயாரித்துள்ள லக்ஷ்மண்குமாருக்கு வாழ்த்துக்கள்.
firstவ halfலேயே நம்மள ரசிக்க வச்சி ,வயிறு குலுங்க சிரிக்கவும் வச்சிட்டதோட secondhalf -அ எப்படி நகர்த்த போகிறார்? அது இன்னமும் சிறப்பா இருந்தானே திருப்தியாக இருக்குமின்னு இன்டெர்வல்ல யோசிக்க வச்ச இயக்குனர், அதுக்கும் நான் தயார் என்று சொல்லி வச்சி இருக்காரு ..படத்தோட highlightயே இப்படித்தான் அடுத்த சீன் இருக்குமின்னு யூகிக்கற நேரத்துல அப்படி சீன் வராம எதிர்பாராத நேரத்துல அப்படிப்பட்ட சீன் வருவதோட அந்த காட்சிகளை ரொம்ப emotion -ஆ ஆக்கோரஷமா இல்லாம ரொம்ப இயல்பா நகர்த்தி கிட்டே போறது புதுசாகவும் அழகாகவும் இருக்குது … சாதிய பிரச்சனையை ரொம்ப பெரிசு படுத்தாம ,ரொம்ப சென்ஸிட்டிவ் ஆன வசனங்கள ரொம்ப நாசூக்கா ,யாரையும் காயப்படுத்தாத வகையில சொல்லி இருப்பதும் சாமர்த்தியம் ,தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கையை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஏற்படுத்தி இருக்காரு.
கதைக்குப்பொருத்தமான நடிகர்களை கொண்டு, பிரமாண்டம், ஆர்ப்பாட்டம், அலப்பறை இல்லாமல், தன் கதையையும், புது விதமான திரைக்கதையினை மட்டுமே நம்பி ,நல்ல படத்தை கொடுத்து, யாரும் எதிர்பாராத நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இயக்குனர் தமிழரசன்.
பல கோடிகளில் எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி அடைஞ்சாலும் சில கோடியில எடுக்கப்படும் படங்கள் வெற்றி அடையும்போதுதான் தமிழ் சினிமா தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் .அதோட ,மாற்றம் ஒன்றே மாறாதது என நிரூபிக்க முடியும் அந்த வகையில இப்படியும் ஒரு commercial படத்தை கொடுக்க முடியும் என்று புதிய பாதையை அமைச்சி இருக்குற லப்பர் பந்து குழுவுக்கு வாழ்த்துகள்
