தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லிகாவும் (வரலக்ஷ்மி சரத்குமார்) மற்றும் அவரது பெற்றோர்களும் – (ஈஸ்வரி ராவ் மற்றும் சார்லி) வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள்,அவர்களது வறுமைமல்லிவின் திருமணம் நடக்காமல் இருக்க காரணமாக உள்ளது இந்த சூழ்நிலையில் வழிப்போக்கனாக அர்ஜுன்(சந்தோஷ் பிரதாப்) அந்த குடும்பத்தில் சேர்கிறார். அவரிடம் இருக்கும் நிறைய பணம், நகைகளை பார்த்தவுடன் மல்லிகாவின் குடும்பத்திற்கு அதன் மீது ஆசை ஏற்பட்டு அவனை கொல்ல நினைக்கிறது. இறுதியில் அந்த குடும்பம் அர்ஜுனை கொன்றார்களா? அவரிடம் இருந்த பணம், நகைகள் என்னாவாயிற்று ? பின்பு அந்த குடும்பத்தின் நிலை என்ன? என்பது தான் இந்த கொன்றால் பாவம் படத்தின் மீதி.

படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள மல்லிகா என்னும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நன்கு நடித்துள்ளார் ,படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது பாராட்டத்தக்கது,.மற்றும் முக்கியமான அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு சிறப்பாக உள்ளது .
ஈஸ்வரி ராவ் மற்றும் சார்லி இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார்கள் .

சாம் சி எஸ் ஸின் இசைமற்றும் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் செழியனின் கேமரா கோண ங்களும் படத்தின் கதை நகர்வுக்கு பக்கபலமாய் உள்ளது.

கன்னடத் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உள்ள இந்த படத்தில் கதைக்கு தேவையான திரைக்கதையும், வசனங்களும், காட்சிஅமைப்புகளும் நிறைவாக உள்ள வகையில் இயக்குனர் தயாள் பத்மநாபன் படத்தை சிறப்புடன் இயக்கியுள்ளார்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த கொன்றால் பாவம் ரசிகர்களை நிச்சயம் கவரும்.
