Monday, March 23

கிங்ஸ்டன்- திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘ திரைப்படத்தில் கதையின் நாயகனாய் நடித்துள்ளதோடு, படத்துக்கு இசையும் அமைத்துள்ளார் ஜீ. வி. பிரகாஷ் குமார்.கடலுக்குள் இருக்கிற கனிமவளத்தை சூரையாடும் ஒரே ஒருவரின் பேராசையால் ஒரு கிராமமே எப்படி சிதைந்துபோகிறது என்பதை கடலுக்குள் கற்பனையை கலந்து பேய் கதையாக வெளிவந்திருக்கும் படம் கிங்ஸ்டன்.

தூத்துகுடி கடற்கரை பகுதியில பல மீனவ கிராமங்கள் இருக்கிறது,அதுல ஒரு கிராம மக்கள் மட்டும் அவங்க இருக்குற பகுதியில மட்டும் மீன்பிடிக்க கடலுக்கு போக மாட்டங்குறாங்க, ஏன்னா கடந்த 40 வருடமா மீன்பிடிக்க கடலுக்குள்ள போகுறவங்க எல்லாரும் பிணமாகாத்தான் வர்றாங்க,கடலுக்குள்ள ஏதோ ஒன்று இருக்குன்னு நம்புறாங்க. இதுனால மூன்று தலைமுறையாக மீன்பிடிக்க போகமால் வருமானத்துக்கு வழி இல்லாம வாழுறாங்க.தாமஸ் (சாபுமோன் அப்துசமத்) அந்த ஊரையும், மக்களையும் தன்னோட கடத்தல் தொழிலுக்காக பயன்படுத்தி கொள்ளகிறார். கேட்காமலேயே பணத்தை கொடுக்குற தாமஸை மக்கள் கடவுள பாக்குறாங்க. சின்ன வயசுல கடலுக்குள்ல. போகனும்னு ஆசைபட்ட கிங்ஸ்டன் ,கடைசியில தாமஸ்கிட்ட வேலை செய்யுறாரு. ஒரு கட்டத்துல அவர பகைச்சிகிட்டு வெளிய வர்றாரு.உயிருக்கு பயந்து மூன்று தலைமுறைய கடலுக்கு போய் மீன்பிடிக்காம போனதுனால தான் வாழ்வாதாரத்திற்க்கும் வறுமைக்கும் காரணம் நெனைக்குறாரு கிங்ஸ்டன். தன் நண்பர்களோட கடலுக்குள்ல போற கிங்ஸ்டன் உயிருடன் கரைக்கு வந்தாரா? இல்லையா? அப்படி கடலுக்குள் இருக்கும் மர்மம் தான் என்ன? என்பதுதான் படத்தோட மீதிக்கதை.கிங்ஸ்டனாக கதாநாயகனாக நடிச்சி இருக்குற G.V.பிரகாஷ் ஒரு மீனவ கிராமத்து இளைஞனாக தோற்றத்திலும், நடிப்பிலும் மாற ஒரு புதிய முயற்சிய செஞ்சியிருக்காரு. முதல்பாதியில தன்னோட வழக்கமான நடிப்ப வெளிபடுத்தியிருந்தாலும், இரண்டாம் பாதியில படம் விறுவிறுப்பாக நகர இவரோட நடிப்புதான் உறுதுணையாக இருக்கு.

முதல்பாதியில சில காட்சிகளிலும், இரண்டாம் பகுதியில படம் முழுக்க வரும் திவ்ய பாரதி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கஷ்டப்பட்டு செஞ்சி இருக்காங்க.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேத்தனின் மற்றொருவிதமான நடிப்பை திரையில பாக்க முடிஞ்சது. வில்லனாக நடிச்சி இருக்குற சபுமோன் அப்துசமத் நடிப்பு கொஞ்சம் வித்தியாசமாகவும், ஆறுதலையும் தந்து இருக்கு. மற்றபடி குமாரவேல், அழகம்பெருமாள் போன்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமா தங்களோட பாணியில சிறப்ப நடிச்சி இருக்காங்க.

தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு கிங்ஸ்டனை தாங்கி பிடிச்சி இருக்கு. Graphics இல்லாத முதல் பகுதி. அப்படியே நேர் எதிராக Graphics துணையோடு இரண்டாம் பகுதி முழுவதும் அமைஞ்சி இருக்கு. கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, ஷான் லோகேஷின் படத்தொகுப்பு, ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை இந்த மூன்று அம்சங்களும், கடலுக்குள்ல நடக்குற கற்பனையான பேய் கதைக்கு தேவையான அனைத்து தொழில் நுட்ப பின்புலத்தையும் கொடுத்து படம் பார்ப்பவர்களை மிரட்சியுடன் பயணிக்க வைச்சி இருக்குது.

வழக்கமாக திகில் படங்களில் வரும் பின்னணியில் இருந்து மாறுபட்டு புதிய தொழில்நுட்ப துணையோடு கடலுக்குள் ஒரு திகில் கதையை உருவாகி புதிய முயற்சி செஞ்சி இருக்காரு இயக்குநர்அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ்..

Spread the love