Wednesday, January 21

கப்ஜா- திரைவிமர்சனம்

உபேந்திரா விமான படையின் பயிற்சியை முடித்த பின் அந்த பணிக்கு செல்லும் முன்பாக தனது சொந்த ஊருக்கு வருகிறார்.அங்கு தேர்தல் சூழ்நிலையில் உபேந்திராவின் சதோதரனால் கலீல் மகன் கொல்லப்பகிறான். இதற்க்கு பழி வாங்கும் விதமாய் உபேந்திரா அண்ணனை கலீல் கொல்கிறான். தன் அண்ணனின் இழப்புக்கு பதிலுக்கு பழி தீர்க்கும் வண்ணமாய் வரும், உபேந்திரா பின்பு கேங்ஸ்டர் கிங் ஆக மாறுகிறார், இந்த கதைகளத்தை பிரமாண்டமாய் சொல்லியுள்ள படம் “கப்ஜா”.

உபேந்திரா, ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க, சிவராஜ்குமார், கிச்சா சுதீப் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது. கதையின் மைய நாயகனாய் உபேந்திரா சிறப்பாக நடித்துள்ளார்

ஸ்ரேயா சரண் , அழகு மிளிர தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நிறைவான பங்களிப்பை தந்துள்ளார் . கேஜிஎஃப் படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர், இந்த படத்துக்கு இசையமைத்து படத்தின் கதையோட்டத்துக்கு வலு சேர்த்துள்ளார்.

நான்கு வருட கனவில் R.சந்துரு உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்ணணி நடிகர்களும் பிரம்மாண்டமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன, இந்த பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படத்தில் இயக்குனரின் எண்ணஓட்டத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவை A. J. ஷெட்டிவழங்கியுள்ளார்.

இந்த கப்ஜா படம், தமிழ் ரசிகர்களையும் கவரும் அனைத்து அம்சங்களையும் கொண்ட நிறைவான படமாகும்.

Spread the love