‘வெள்ளைக்காரன் பிரியாணி’ என்னும் பெயரில் பிரியாணி கடை ஒன்றை பவானியின் குடும்பம் நடத்தி வருகிறார்கள். அரசியல்வாதி ஒருவரிடமிருந்து இருந்து அவர்களுக்கு பெரிய ஆர்டர் கிடைக்கிறது.ஆனால், அதற்கான பணத்தை தராமல் அரசியல்வாதியின் அடியாட்கள் பவானியின் தாத்தாவை தாக்குவதோடு கடையினையும் சேதப்படுத்துகிறார்கள் அதனால் .மேற்கொண்டு அந்த கடையை நடத்த முடியாமல் வழக்கறிஞர் பூங்குன்றனிடம் உதவி கேட்டு பவானியின் குடும்பம் செல்கிறது.ஆனால் அங்கு அவரை யாரோ கொலை செய்துவிட, அதற்குப்பின் அவர்கள் என்ன செய்தார்கள்? அந்த பூங்குன்றத்தைக் கொன்றவர்கள்
யார் ?என்பதே படத்தின் கதை.
புதிய பரிமாணத்தில் பிரபு தேவா நன்றாக நடித்துள்ளார் மடோனா செபாஸ்டின். அபிராமி,. யோகி பாபு, ஜான் விஜய், ரோபோ சங்கர், சக்தி சிதம்பரம் ஒய் .ஜி.மகேந்திரன், என நடிகர்கள் பட்டாளம் அணி வகுத்து நீள்கிறது .யாருடைய நடிப்பிலும் குறை இல்லை .

எம்.சி. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு காட்சிகளை வண்ணமயமாக்கியுள்ளது . அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ற வகையில் .அமைக்கப்பட்டுள்ளது.
.ழுழுக்க பொழுபோக்கு அம்சங்களுடனும், நகைச்சுவை நிறைந்த கதைகளத்துடனும் இயக்குனர் இயக்குநர் சக்தி சிதம்பரம் படத்தினை உருவாக்கியுள்ளார் .
மொத்தத்தில் ஜாலியோ ஜிம்கானா -நகைச்சுவை கலாட்டா
