‘கட்ஸ்’ திரைப்பட விமர்சனம்
ரங்கராஜ் பிறக்கும்போதே அவருடைய அப்பாவை எதிரிகள் வெட்ட, அதனால அவர் இறந்து போறாரு,. சில வருடங்களுக்குப் பிறகு அவருடைய அம்மாவும் இறந்து போறாங்க, தாய் மாமன் சாய் தீனா தான் இதுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிற ரங்கராஜ் ,அவரை விட்டு விலகி வளர்ந்து, பெரிய ஆள் ஆகி, போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் ஆகுறாரு,மனைவி சுருதி நாராயணன் மற்றும் குழந்தை நான்சியோட சந்தோஷமா இருக்கிற ரங்கராஜ், நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருக்கிறதால, பல ரௌடிகளோட பகைக்கும் ஆளாகிறாரு ,.சந்தோஷமா போயிட்டு இருக்குற அவருடைய வாழ்க்கையில, அவரால ஜெயிலுக்கு போன பிர்லா போஸ் உடைய தம்பி ரிலீஸ் ஆகி வெளிய வந்தவுடன் பிரச்சினை ஆரம்பமாகுது, ரங்கராஜ பழிவாங்கணும்னு நினைக்கிற பிர்லாபோசின் தம்பி, வீட்டில தனியா இருக்கிற சுருதி நாராயணனை கொலை செய்கிறாரு ,அதனால சந்தோஷமா, அழகான குடும்பமா இருந்த ரங்கராஜ்னுடைய சிறு குடும்பத்தின் கூடு கலைந்து போக, சுருதி நாராயணனை கொன்றவனை ரங்கராஜும் கொல்றாரு ,ஆனால் அதற்கு பின் மனைவியை மறக்க முடியாம மதுவுக்கு அடிமையாகி, போலீஸ் வேலைக்கு போகாம இருக்கிறாரு , கான்ஸ்டபிளாக இருக்கிற டெல்லி கணேஷ் அவருக்கு பல அட்வைஸ் செய்றாரு.அதே சமயம் தன்னுடைய தம்பியோட இறப்புக்கு காரணமான ரங்கராஜ ,அடையாளம் கண்டுபிடித்து அவரை பழி வாங்கணும்னு நினைக்கிறாரு பிர்லா போஸ்..தன்னுடைய மகளுக்காகவாவது வாழனும்னு நினைக்கிற ரங்கராஜ் தன்னோட மகளை கூப்பிட்டுகிட்டு தன்னுடைய சொந்த கிராமத்துக்கு போறாரு, அங்க தாய்மாமன் தினா கிட்ட நடந்த விஷயங்களை எல்லாம் சொல்றாரு, இந்த சூழ்நிலையில்தான், ரங்கராஜ் தன்னோட அப்பாவை பற்றியும் அவரை யார் கொலை செஞ்சாங்க? அப்படிங்கற சில உண்மைகளை தினா மூலமாக தெரிஞ்சுக்கிறார்,அப்பாவில் ஆரம்பிக்கப்பட்ட பகை, மகனுக்கும் தொடர ,கடைசில என்ன நடந்தது ?அப்படிங்கறதுதான் கட்ஸ் படத்துடைய கிளைமேக்ஸ்.
அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் ரங்கராஜ் ஒருவரே நடிச்சிருக்கிறார், தோற்றத்தில் சில மாறுதல்கள் இருப்பது போலவே நடிப்பிலும் புதுமுக நடிகர் என்கிற ஒரு தயக்கமும் இல்லாமல் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏத்த மாதிரி வெகு இயல்பாகவும், பயம் இல்லாமலும், பதட்டமில்லாமலும் நடிச்சிருக்கிறார் .இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை விட, அதாவது மகன் கதாபாத்திரத்தை விட,அப்பா கதாபாத்திரத்தில் இருக்கும், அவருக்கு தோற்றமும், நடிப்பும் ஓரளவுக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கு, இரு வேறு டைமென்ஷன்ல நடிக்கணும் என்கிற அவருடைய முயற்சி வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கதாநாயகியா நடிச்சிருக்கிற சுருதி நாராயணன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அழகா பயன்படுத்தி இருக்காங்க ,சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவருடைய அழகு, பிளஸ் நடிப்பு படத்துக்கு உறுதுணையா இருந்திருக்கு.
பல படங்கள்ல வில்லனாகவும், சில காட்சிகளில் ரவுடியாகவும் சாய் தினாவை பார்த்திருப்போம் ஆனால் இந்த படத்துல அவர் தன்னோட சிறப்பான நடிப்ப வெளிப்படுத்துவதற்கான பல காட்சிகள் அவருக்கு கிடைத்திருக்கிறது. முரட்டு முகத்துக்குள் ஒரு குணச்சித்திர நடிகராக அவர இந்த படத்தில் பார்க்கலாம். மற்றபடி படத்தில் நடித்து இருக்கிற மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் ,அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியா செஞ்சிருக்காரு, வில்லனாக நடிச்சிருக்கிற பிர்லா போசுவுக்கு பல படங்கள் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பு இருக்கு., அந்த நம்பிக்கையை இந்த படம் அவருக்கு கொடுத்திருக்குன்னு சொல்லலாம் .படம் முழுக்க சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவரவர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செஞ்சு படத்தோட காட்சிகளுக்கு உற்ற துணையாய் இருந்திருக்காங்க
மனோஜின் ஒளிப்பதிவு கதைக்கேற்ற வகையில் காட்சிகளை விட்டு விலகாமல் இருக்கிறது, இருந்தாலும் தன்னுடைய தன்னுடைய பதிவில் கவனம் செய்திருந்தால் அது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும்..ஜோஸ் பிராங்க்ளின் பாடல்கள் சிறப்பாக அமைஞ்சிருக்கு, ஆனால் அதேபோல பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கிடல் செய்திருந்தால் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்வதற்கு அது உற்ற துணையாக அமைந்திருக்கும்.
புது முகங்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள படம், கதாநாயகனும் ,அவரே, இயக்குனரும் அவரே, அவரது மனைவிதான் தயாரிப்பாளர் ,சில நடிகர்களை தவிர மற்ற அனைவரும் அறிமுகம், எப்படி இருக்குமோ என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அமர்ந்து பார்க்கும் பொழுது படம் தொடங்கியது ,தொடங்கிய சில காட்சிகளிலேயே அந்த எண்ணத்தை மாற்றி, ஏதோ ஒரு புது விஷயத்தை சொல்லப் போகிறார்கள் என்று தோன்றுகிறது ,ஆனாலும் எதிர்பாராத காட்சிகள் கொண்ட திரைக்கதையாக அமைந்திருந்தால் கட்ஸ் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் ,இருந்தாலும் வன்மம்,,பழிக்கு பழி வஞ்சகம், சூழ்ச்சி இவைகளை கடந்து வந்த திரைக்கதை ,கடைசியில் மண்ணும், மண் சார்ந்த விவசாயமும், விவசாயம் சார்ந்த மக்களின் வலியையும் சொல்லி இருக்கு ,. யாரும் சொல்லாத விஷயம் இல்லை என்றாலும் கூட அறிமுகப்படத்தில் சமூக கருத்தை மையமாக வைத்திருப்பது ஆறுதலுக்கு உரியது., அடுத்து எடுக்க போகின்ற படங்களில் சிறு சிறு தவறுகளையும் சரி செய்து, சிறந்த படைப்பை உருவாக்க ரங்கராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லலாம்.
