கதையின் நாயகன் அசோக் செல்வன் திரைப்பட உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அவந்திகா மிஷ்ராவை காதலித்து வருகிறார். ஒரு சூழலில் அசோக் செல்வன் மீது தவறுதலான அபிப்பிராயம் கொள்ளும் அவந்திகா அவரை விட்டு விலகி செல்லுகிறார்.பின்பு மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதே இப்படத்தின் மீதி கதை.
காதல் கதைக்கு ஏற்ற நாயகனாய் அசோக் செல்வன் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். நாயகி அவந்திகா மிஸ்ராவும் நாயகனுக்கு பொருத்தமான இணையாக வலம் வந்து குறைவில்லா நடிப்பை கொடுத்துள்ளார் .மேலும் அழகம் பெருமாள், ஊர்வசி, படவா கோபி, எம்எஸ் பாஸ்கர் போன்றவர்களும் அவரவர் பாணியில் நன்கு நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் கதைக்கு ஏற்ற வகையில் படம் முழுவதும் பயணித்து, காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது. அதேபோல கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் படத்தின் காட்சிகள் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளன.
.காதல் ,நகைச்சுவை என பொழுது போக்கு படத்துக்கேற்ற இலக்கணத்துடன் இயக்குனர் பாலாஜி கேசவன். இந்த படத்தினை உருவாக்கியுள்ளார்.
மொத்தத்தில், ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ நல்லதொரு பொழுதுபோக்கு படம்.
