டியூட் விமர்சனம்
அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரனின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த டியூட் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்
கதையின் நாயகனனான அகன் (பிரதீப் ரங்கநாதன்) ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார் அவரது மாமா மகள் குறளரசி. (மமிதாபைஜு) அகன் மீதான காதலை குறளரசி சொல்லும் பொழுது அந்தக் காதலை அகன் நிராகரிக்க அதனால் மனமுடைந்து போகும் குறளரசி படிப்பிற்காக வேறு ஒரு ஊருக்கு சென்று விடுகிறார் ஆனால் பிரிந்திருக்கும் கால இடைவெளியில் அகனுக்கு குறளரசி மீது காதல் மலர்கிறது தன்னுடைய விருப்பத்தை தனது மாமாவிடம் தெரிவிக்க திருமணத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன ஆனால் திரும்பி வரும் குறள் சு தனக்கு வேறு ஒருவர் மீது காதல் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று சொல்லுகிறார் இதன் பிறகு என்ன நடந்தது குறளை அவளது காதலுடன் அகன் சேர்த்து வைத்தாரா ?அதன் பின் அகனின் நிலை என்ன என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகனாக அகன் என்னும் கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார், அவரது முதல் இரண்டு படங்களைப் போலவே இந்த படத்திலும் அவர் ஏற்றி இருக்கும் கதாபாத்திரம், அவரது தோற்றத்திற்கும் உடல் மொழிக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் இவர் நன்கு நடித்துள்ளதால் அது இன்றைய இளைஞர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. மமிதா பைஜூவை பொறுத்த வரையில் தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் சிறப்பாக பரிமளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். அதியமான் எனும் கதாபாத்திரத்தில் அமைச்சராக நடித்திருக்கும் சரத்குமார், தந்தை ,தாய் மாமன் என்ற இரு மாறுபட்ட உறவுகளை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் ,மேலும் ரோகிணி ,நேகா ஷெட்டி போன்றவர்களும் தங்களது பங்குக்கு நல்லவிதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள் .
சாய் அபயங்கரின் இசையில் ஊறும் பிளட், சிங்காரி போன்ற பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் வகையில் உள்ளது ,அதேபோல காட்சிகளுக்கு இணக்கமான பின்னணி இசையும் படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகளில் ஒன்றாக உள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்து காட்சிகளுக்கு பொலிவூட்டியுள்ளது.காதல் ,காமெடி அத்துடன் மெசேஜ் என அனைத்து அம்சங்களும் கலந்த திரைப்படமாக இந்த டூயட் படத்தை இயக்குனர் கீர்த்திஸ்வரன் உருவாக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் இந்த டியூட், விடுமுறை விழா காலத்திற்கு ஏற்ற நல்லதொரு பொழுது போக்கு படம்.
