Tuesday, March 17

திவ்யா- திரை விமர்சனம்

காதலுக்கு எதிரான சாதியை மையப்படுத்தி, நடக்கின்ற ஆணவக் கொலை மீண்டும் பதிவு செய்து ,புதுமுகங்கள் சேர்ந்து உருவாக்கி இருக்கின்ற  படம் திவ்யா.

தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்டு சமூகத்தில் இருந்து ஆர். ஜே. பி காலேஜ் படிக்கிறாரு சபி மற்றும் ஜிவி நண்பர்களோடு காலேஜ்ல ஜாலியா இருக்கறதும், தாத்தா உடைய வளர்ப்புல வேலை செஞ்சுகிட்டே படிக்கிறார். அதே காலேஜ்ல கேத்தியும் படிக்கிறாங்க. இவங்களுக்கும் ஆர். ஜே. பி உடைய நண்பர்களுக்கும் மோதல் ஏற்பட கடைசியில இவங்க ரெண்டு பேரும் காதலர்கள் மாறுகிறாங்க . ஒரு கட்டத்துல கேத்தி உடைய அப்பாவுக்கு விஷயம் தெரிய வருது. இவர்களுடைய காதலுக்கு சாதி ஒரு பிரச்சனையாய் மலை போல் முன் நிற்க, கேத்தியுடைய அப்பா காதலுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறாரு . வழக்கம் போலவே அவசர அவசரமாக தன் மகளுக்கு சொந்தத்திலேயே கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்றாரு கேத்தியோட அப்பா. இன்னொரு பக்கம் காதலனோடு தான் வாழ்வேன் என்று கேத்தி பிடிவாதமா இருக்காங்க ,ஆர். ஜே. பி தன் காதல் நிறைவேறி விடும் என்னும் நம்பிக்கையோடு இருக்காரு ..கடைசில என்ன நடந்தது அப்படிங்கறதுதான் திவ்யா படத்துடைய முடிவு.

படத்துடைய கதாநாயகனா சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஆர்.ஜே. பி  அந்த கதாபாத்திரத்திற்கும் ஏற்ற மாதிரி தோற்றமும், இயல்பான நடிப்பும் ,பொருத்தமா இவர்கிட்ட இருக்கு., கதாநாயகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறிமுகம் ஆகி இருக்கின்ற ஆர். ஜே. பி ,திவ்யாவை  நல்லதொரு திரைபடமாக உருவாகியிருக்காரு .

அறிமுக நாயகியாக நடித்திருக்கும் கேத்தி, திவ்யா கதாபாத்திரத்திற்கு மிகச் சரியாக இருந்தாலும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் பார்ப்பவர்களின் மனம் கனத்திருந்திருக்கும். மற்றபடி படத்தில் நடிச்சியிருக்குற மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கும் படத்திற்கும் பெரிது உதவியாய் இருந்திருக்காங்க.

சங்கர் ராமின் இசையும் சில இடங்களில் வரும் மௌனமும் படத்திற்கும், திரைக்கதைக்கும் பலமாகவும் தொய்வில்லாமல் கதையினை ந கர்த்தியும் செல்ல உதவி இருக்கு .ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் கவனம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருந்தால் பட்ஜெட் படம் என்கின்ற எண்ணம் ஏற்படாமல் இருந்திருக்கும்.

சாதியை மையப்படுத்தி இருக்கும் கதையை மிக மிக கவனமாக கையாண்டு ,காட்சிகளை நகர்த்தி சர்ச்சைக்குள் சிக்காமல் சாமர்த்தியமாக இயக்குவது என்பது மிகவும் கடினம். அப்படிப்பட்ட ஒரு கதையின் கருவை, புதுமுக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் தானே நடித்தும் ஆங்காங்கே சாதி பாகுபாடுகளை நேரடியாக சொல்லியும் மீண்டும் ஒரு ஆவண க் கொலையை காட்சி வடிவில் பதிவு செய்திருக்கிறார் ஆர்.ஜே.பி .இதுவரை பார்த்திராத கதை என்று சொல்ல முடியாவிட்டாலும் , இன்னும் சில சினிமாவிற்கே உரிய சில கமர்சியல் விஷயங்களை உள்ளடக்கிய திரைக்கதையினை அமைத்திருந்தால் திவ்யா புது முயற்சிக்கான அடையாளமாக,அங்கீகாரமாக அமைந்திருக்கும்.

 

Spread the love