Wednesday, January 7

‘டியர் ரதி’ – திரைப்பட விமர்சனம்

இந்த காலகட்டத்தில் அழகிய பெண்களை பார்த்தவுடன் அவர்களை இம்ப்ரஸ் செய்து விட வேண்டும் என்பதற்காக பல வழிகளில் பேசி முயற்சிக்கும் இளைஞர்கள் நிறைந்திருக்க கூடிய சூழலில் ,பெண்களிடம் பேசவே தயங்கக்கூடிய ஒரு இளைஞனாக சரவண விக்ரம் இருக்கிறார் ,அவரது தயக்கத்தை போக்க நண்பன் ஒருவர் ஒரு பாலியல் விடுதிக்கு அவரை அழைத்துச் செல்ல ,அங்கு ரதியை (ஹஸ்லி அமான் )பார்த்தவுடன்  ஒரு நாள் முழுவதும் அவருடன் டேட்டிங் செய்வதற்காக வெளியே அழைத்துச் செல்கிறார், அதே நாளில் அந்த பெண்ணை தேடி ரவுடி கும்பல் ஒரு பக்கம் துரத்துகிறார்கள், ஜோடியாக வெளியே சென்றவர்களின் நிலைமை அதன் பின் என்ன ஆனது ?என்பதுதான் ‘டியர் ரதி’ படத்தின் மீதி கதை.

படத்தில் மதன் என்னும் கதாபாத்திரத்தில் சரவணன் விக்ரம் கதையின் நாயகனாக நடித்துள்ளார், இவர் ஏற்கனவே தொலைக்காட்சி தொடர் மூலமாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தவர் ,அந்த அறிமுகம் இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு விலாசத்தை கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம் .கதையின் நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார், இதற்கு முன் மலையாள படத்தில் நடித்திருந்த இவர் இந்த படத்தின் மூலமாக தமிழ்  தமிழ் திரை உலகில் கால் தடம்  பதித்துள்ளார் இவர்கள் இருவருமே தாங்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி தங்களது நடிப்பை பதிவு செய்து இருக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜேஷ் பாலச்சந்திரன் , சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நினைத்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட்.. இவரது இசையில் பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் இல்லாமல் இருந்தாலும் பின்ணணி  இசை ,கதையின் காட்சிகளுக்கு ஏற்ப இணக்கமான முறையில் அமைந்துள்ளது.லோகேஷ் இளங்கோவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் காட்சிகளுக்கு ஏற்ப தன்னுடைய பங்களிப்பை கொடுத்து ,இயக்குனருக்கு பக்கபலமாக இவரது ளிப்பதிவுஅமைந்துள்ளது. படத்தினை இயக்கியிருப்பவர் பிரவீன் கே மணி. ரொமான்டிக் லவ் ஸ்டோரி கதைக்களத்தில், படத்தினை உருவாக்கி இருக்கும் இயக்குனர், இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளை பேசும் கதாபாத்திரங்களைக் கொண்டு ,ஒரு பொழுதுபோக்கு படமாக இந்த படத்தினை அவர் உருவாக்கியுள்ளார்.

மொத்தத்தில் சமகால இளைஞர்களை இந்த ரதி கவரும்.

Spread the love