குறட்டையால் குடும்ப உறவில் ஏற்படும் பிளவு
படத்தின் கதையின் நாயகனாய் அர்ஜுன் என்னும் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் செய்தி வாசிப்பாளராக உள்ளார் ஒரு சிறு ஒலி கேட்டால் கூட உறக்கத்திலிருந்து விழித்து எழுந்துவிடும் இவருக்கும், உறக்கத்தில் குறட்டைவிடுவதை பழக்கமாக கொண்டுள்ள தீப்திக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருமணம் நடக்கிறது கதையின் நாயகியின் அந்த குறட்டையினால் ஏற்படும் குழப்பங்கள், அதன் தீர்வுகளை சொல்லுவதே ”டியர் (DeAr)”.மீதி கதை.ஆகும்.

இந்த படத்தின் கதையின் நாயகனாய் ஜி.வி.பிரகாஷ்குமார் இன்றைய காலத்தின் இளைஞர்களை கண் முன் னே நிறுத்தும் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். கதையின் நாயகியாய் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின்ஐஸ்வர்யாவின் கதாபாத்திரமும் அதை அவர் வெளிப்படுத்தியுள்ள விதமும் நன்றாக உள்ளது மேலும் அண்ணனாக நடித்துள்ள காளி வெங்கட் அவரது மனைவியாக நடித்துள்ள நந்தினி கீதா கைலாசம், இளவரசு,ரோகிணி, தலைவாசல் விஜய் என நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள் அவர்களது பாத்திர படைப்புகளும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்களது நட்சத்திரத்தேர்வும் நன்றாக உள்ளது.
குடும்ப உறவுச்சிக்கல்களை அடிப்படையாக கொண்டு பலபடங்கள் வந்திருந்தாலும், எடுத்துக்கொண்ட கதை முடிச்சில் புதுமையினையும், அந்த கதையினை நகர்த்திச்செல்ல தெளிவான காட்சிகளையும், கொண்டு இயக்குனர் ஆனந்த் ரவிசந்திரன் இந்த படத்தினை உருவாக்கியுள்ளார், வெளிப்புற காட்சிகளில் ஜெகதீஸ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் ,ருகேஷின் படத்தொகுப்பையும் குறை காண முடியாத வகையில் உள்ளன.
மொத்தத்தில் “டியர்” படம் அனைவரும் பார்க்கலாம், ரசிக்கலாம் .
