தென்காசி மாவட்டத்தில் உள்ள டி3 காவல் நிலையத்துக்கு ட்ரான்ஸ்பராகி வருகிறார் இன்ஸ்பெக்டரான கதையின் நாயகன் விக்ரம்(பிரஜின்) , அப்பகுதியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளம் பெண் வழக்கை விசாரிக்கையில் போது, அது விபத்து என்று நினைக்கும் போது, மற்றொரு விபத்து அதே போல் நடக்க, இன்ஸ்பெக்டருக்கு சந்தேகம் ஏற்படுகிறது.இந்த தொடர் சம்பவங்களின் பின்னணியை ஆராய்கிறார் ஆனால் தொடர்ந்து பல பிரச்சனைகள் அவருக்கு வந்துகொண்டே இருக்கிறது .அவற்றையெல்லாம் எதிர் கொண்டு குற்றங்களின் பின்புலத்தையும் , குற்றவாளிகளையும் அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா ? என்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது ‘டி3’-யின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரஜின், காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு நன்கு ஏற்புடைய தோற்றத்திலேயும் உடல் மொழியிலேயும் சிறப்பாக நடித்துள்ளார் .
வித்யா பிரதீப் நாயகியாக நடித்திருக்கிறார் ,தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற பங்களிப்பை கொடுத்துள்ளார் மேலும் சார்லி, ராகுல் மாதவ் ,காயத்ரி யுவராஜ், ஆனந்தி, ஆகியோர் படத்தில் இடம் பெரும் பல கதாபாத்திரங்களின் இயல்பை வெளிப்படுத்தும் வகையில் நன்கு நடித்துள்ளார்கள் .

மணிகண்டனின் ஒளிப்பதிவும்,ராஜாவின் படத்தொகுப்பும்,ஸ்ரீஜித் எடவானாவின் இசையும் , இயக்குனர் பாலாஜியின் காட்சி அமைப்புகளுக்கு ஏற்ற இணைபங்களிப்பை வழங்கி படத்தின் கதையோட்டத்துக்கு பெரிது துணை நின்றுள்ளன.

த்ரில்லர் கதையினை விறுவிறுப்பான காட்சிகளுடன் நிறைவான படமாக இயக்கியிருக்கிறார் அறிமுக பாலாஜி.
சஸ்பென்ஸ் காட்சிகள், த்ரில்லான திருப்பங்கள் நிறைந்த D3 எல்லாத்தரப்பு ஆடியன்ஸையும் கவரும்.
