*ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் ஆகிய இரண்டு பாகங்களைத் தொடர்ந்து மூன்றாவது பாகமான நித்திலன் வாக்குமூலம் வெளியானது*

செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்து துல்லியமாக விவாதிக்கும் ‘நித்திலன் வாக்குமூலம்’ என்ற நாவல் இன்று வெளியானது. எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து இதனை எழுதியுள்ளார். முதல் இரண்டு பாகங்களை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, நிறைவு பாகத்தையும் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா நூலை வெளியிடும் காட்சி, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது இல்லத்தில் படமாக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் குற்ற இனச் சட்டத்தை மையமாகக் கொண்ட கபிலன்வைரமுத்துவின் ஆகோள் என்ற நாவல் 2022ஆம் ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகமான மாக்கியவெல்லி காப்பியம் 2024ஆம் ஆண்டு வெளியானது. ஆகோள் தொடரின் மூன்றாவது மற்றும் நிறைவு பாகமான நித்திலன் வாக்குமூலம் இன்று வெளியானது. ஆகோள் முதல் பாகம், பிரிட்டிஷ் அரசின் கை ரேகை சட்டத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த மதுரை பெருங்காமநல்லூர் வீரர்களின் கதையை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியது. மாக்கியவெல்லி காப்பியம் என்ற இரண்டாம் பாகம் மாநில சுயாட்சி குறித்த அறிவியல் பார்வையைப் பதிவு செய்தது. நித்திலன் வாக்குமூலம் என்ற இந்த மூன்றாம் பாகம், குற்ற இனச் சட்டம் தோன்றிய வரலாறையும், எதிர்கால செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் செயல்பாடு குறித்தும் ஆழமாக விவாதிக்கிறது. ஆகோள் தொடரின் மூன்று நாவல்களையும் டிஸ்கவரி பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது. வருகிற ஜனவரி 04ஆம் நாள் நித்திலன் வாக்குமூலத்திற்கான ‘ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி’, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
*நித்திலன் வாக்குமூலம் வெளியீட்டு காணொளி:*
https://we.tl/t-kHMyjwcfuk
