Monday, March 23

‘படவா’ -திரைவிமர்சனம்

விமல் ,சூரி ,ஸ்ரீதா ராவ்,கே ஜி எஃப் ராம் , தேவதர்ஷினி, நமோ நாராயணன் மற்றும் பலரின் நடிப்பில் கே .வி . நந்தா இயக்கியுள்ள படவா படத்தின் .இசை ஜான்பீட்டர்,

சிவகங்கை மாவட்டதில் உள்ள ஒரு கிராமத்தில் கதையின் நாயகன் விமல், தன்னுடைய நண்பன் சூரியுடன் சேர்ந்துக் கொண்டு, பொறுப்பின்றி ஊரை சுற்றுவதோடு, அந்த ஊர் மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறார். இதனால் அவரை அந்த ஊரை விட்டு அல்ல, நாட்டை விட்டே கடத்த ஊரின் மக்கள் தீர்மானிக்கிறார்கள், அதன்படி அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.,அங்கே அவர் சில வருடங்கள் பணிபுரிந்து விட்டு மீண்டும் சொந்த கிராமத்துக்கே திரும்பி வருகிறார்..ஊர் திரும்பிய விமலை மறுபடியும் பார்த்த மக்கள் அவரை வரவேற்கிறார்கள்.அதன் பிறகு அவரை ஊர் தலைவராக கூட தேர்வு செய்கிறார்கள்,.இதன் பின்னணி என்ன? பஞ்சாயத்து தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஊரின் குளம், கண்மாய்களை செப்பனிடுவது, விவசாய நிலங்களை பாழாக்கும் வேலிக்கருவை மரங்களை அழித்து ஒழிக்க நடவடிக்கை எடுப்பது என் பொதுநலப்பணிகளில் விமல் ஈடுபடு வதால் அவருக்கு ஊரில் நல்ல பேர் கிடைப்பதோடு,. அந்த ஊராட்சிக்குச் சிறந்த ஊராட்சி என்று பரிசும் கிடைக்கிறது.அதன் பின் நடப்பவைகளை சொல்லுவதுதான் ‘படவா’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக விமல் அவருக்கு என்றே அளவெடுத்து தைத்த கதாபாத்திரத்தில், வழக்கம்போல தன்னுடைய பாணி நடிப்பில் நன்கு நடித்துள்ளார்.நாயகன் விமலின் நண்பரான நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து நகைச்சுவை காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்,நாயகியாக நடித்திருபவர் ஷ்ரிதா ராவ், அவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் குறைவின்றி நன்றாக நடித்துள்ளார்,விமலின் சகோதரியாக தேவதர்ஷினியும் , மாமாவாக நமோ நாராயணனும் இயல்பாக நடித்துள்ளனர்,மற்றும் வில்லனாக கேஜிஎப் ராமும் மேலும் வினோதினி வைத்தியநாதன்,சரவண சக்தி போன்ற ஏனைய நடிகர்களும் அவரவர் கதாபாத்திர ங்களில் நன்றாக நடிப்பை வெளிபடித்தியுள்ளார்கள்.

ஜான் பீட்டரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும், ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் படத்தின்காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை நன்கு வழங்கியுள்ளன.காதல், நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு கதையில் வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்களையும் சொல்லி நல்லதொரு படத்தினை இயக்கியுள்ளார் .இயக்குநர் கே.வி.நந்தா.

மொத்தத்தில் படவா ரசிக்ககூடியவன் .

Spread the love