Wednesday, March 18

பேபி அண்ட் பேபி- திரைப்பட விமர்சனம்

பேபி அண்ட் பேபி திரைப்பட விமர்சனம்
வெளிநாட்டில் இருந்து சிவா (ஜெய்) மற்றும் குணா (யோகி பாபு )இருவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் ,சென்னையில் விமான நிலையத்தில் காத்திருக்கும் பொழுது, சிவாவின் குழந்தையும், குணாவின் குழந்தையும் மாறிவிடுகிறது, சிவாவின் அப்பா சத்யராஜ் தனது மகனின் ஆண் வாரிசையும், குணாவின் அப்பா தங்கள் குடும்பத்து பெண் வாரிசையும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகள் இடம் மாறி போனதால், ஏற்படக்கூடிய சம்பவங்கள் அதை அவர்கள் எப்படி சமாளித்து சூழலை எதிர்கொள்கிறார்கள், என்பதை காமெடி கலந்த திரைக்கதையுடன் சொல்வதே இந்த பேபி அண்ட் பேபி படத்தின் மீதி கதை ஆகும்

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ஜெய் மற்றும் யோகி பாபு ஏற்றுள்ளார்கள், இருவருக்குமே படத்தில் சம வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது , அதே போல சத்யராஜ் இளவரசு போன்ற மூத்த நடிகர்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று தங்களது அனுபவ நடிப்பினை வெளிப்படுத்தும் வகையில் நன்கு நடித்துள்ளார்கள் .ஜெய் தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திலும் கொடுத்து நடித்துள்ளார். யோகி பாபுவின் நகைச்சுவை துணுக்குகள் ஆங்காங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. சாய் தன்யா, பிரக்யா நாக்ரா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.மேலும் நிழல்கள் ரவி ,கீர்த்தனா,ஆனந்தராஜ்,சிங்கம்புலி,,மொட்டை ராஜேந்திரன் , ரெடின் கிங்ஸ்லி ,ஸ்ரீமன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க நிறைந்துள்ளனர்.
குழந்தைகள் இடம் மாறுவது போன்ற கதைகள் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்துள்ளன, அதே மாதிரியான ஒரு கதை கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் புதிய காட்சிகளை அமைத்து ,புதிய நடிகர்களை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக்க இயக்குனர் பிரதாப் முயற்சித்துள்ளார் ,ஒரு சில காட்சிகளில் அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது .படத்தின் இசை, D. இமான் குடும்ப பின்னணியில் கதைக்களம் கொண்ட நகைச்சுவை படங்களுக்கு தேவையான அளவிற்கு பாடல்களையும், பின்னணி இசையினையும் அவர் கொடுத்துள்ளார். சாரதியின் ஒளிப்பதிவு ,கதையின் காட்சிகளுக்கு தேவையான அளவிற்கு நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் பேபி அண்ட் பேபி முழு நீள டைம் பாஸ் நகைச்சுவை திரைப்படம்.

Spread the love