கபடி விளையாட்டு வீரரான ஈஷானும் ப்ரணாலியும் காதலித்து வருகின்றனர். ஒரு சமயம் நாயகியின் அறைத் தோழி தற்கொலைக்கு முயலுகிறாள் , அதை பற்றி பிரணாலி விசாரிக்கும்போதுதான் அவள் ஒரு ஏமாற்று கும்பலின் பிடியில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பிக்க முடியாமல் தவித்து இந்த முடிவை எடுத்தது தெரிய வருகிறது அவரை காப்பாற்றும் நாயகி, நாயகனிடம் இந்த விபரங்களை கூற அவர்களுக்கு உதவ நாயகன் முடிவு எடுக்கிறார்,இறுதியில் வில்லன் கும்பல் சிக்கியதா? என்பதே மீதி படத்தின் கதை

படத்தின் கதையின் நாயகனாக இஷான், ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளார் நாயகி பிரணாலி தன் பங்குக்கு குறைவின்றி நடித்துள்ளார் பெண்களை காதலிப்பது போல் காதலித்து ஏமாற்றும் கும்பலின் தலைவனாக டேனியல் பாலாஜி.தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ற நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் ஆகியோரின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. விஷ்ணுவின் ஒளிப்பதிவும் கதையின் நகர்வுக்கு உறுதுணையாக உள்ளது, திரைக்கதையில் புதுமையுடன், சிறந்த நட்சத்திரங்களுடன்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவகர்.
அரியவனை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் .
