கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘அனலி’யில் முழுநீள ஆக்ஷன் ஹீரோயினாக சிந்தியா லூர்டே நடித்திருக்கிறார்.

சக்திவாசு , அபிஷேக் , கபிர் துஹான் சிங் என்ற மூன்று தாதாக்கள் இருக்கிறார்கள், ஒரு சமயம் சென்னைக்கு தன் மகளுடன் வருகிறார் சிந்தியா லூர்டே, தான் போக வேண்டிய இடத்திற்கு ஒரு ஆட்டோவில் அவர் செல்லும் பொழுது அந்த ஆட்டோ டிரைவர் செல்லும் வழியில் ஒரு நண்பனை பார்க்கச் செல்ல, தாயும் மகளும் ஆட்டோவில் காத்திருக்கிறார்கள், ஆட்டோ டிரைவருக்கும், அந்த தாதாக்களுக்கும் பிரச்சினை ஏற்பட ,அதில் தலையிடும் சிந்தியா மீது தாதாக்களுக்கு கோபம் ஏற்படுகிறது, அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் சிந்தியா ஒரு முக்கியமான பொருள் ஒன்றை அந்த இடத்தில் விட்டு விட்டு வந்து விடுகிறார் அதன் பிறகு அந்த மகளும் காணாமல் போகிறார் ,தான் விட்டு வந்த பொருளைத் தேடி சிந்தியா செல்கிறார் அதன்பின் என்ன நடந்தது ?அவர் தேடிப்போன பொருள் எது ?அதற்குப்பின் அந்த தாதாக்கள் என்ன செய்தார்கள் ?என்பதே ‘அனலி’ படத்தின் மீதிக் கதை.
இதில் சிந்தியா லூர்டே கதையின் மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பெண்ணை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் அவர் நிறைவாகவே நடித்துள்ளார், மேலும் தாதாக்களாக நடித்துள்ள சக்தி வாசு, அபிஷேக் , கபிர் துஹான் சிங்,மற்றும் ஜென்சன் திவாகர், இனியா என பிறரும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்றாக நடித்துள்ளார்கள் .படத்தின் நாயகியாக நடித்துள்ள சிந்தியா லூர்டே இந்த படத்தை தயாரித்திருக்கிறார் ,இந்த படத்தின் மூலம் ஒரு முழு நீள ஆக்சன் கதாநாயகியாக அவர் படம் முழுக்க திரை வலம் வருகிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ராமலிங்கம், இசை தீபன் சக்கரவர்த்தி இருவரும் கதைக்கும் ,காட்சிகளுக்கும் தேவையான தொழில்நுட்ப பங்களிப்பை வழங்கி இயக்குனருக்கு உறுதுணையாக நின்று உள்ளார்கள். அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதையினை எடுத்துக்கொண்டு ,அதில் கமர்சியல் படங்களுக்கு தேவையான அம்சங்களை இணைத்து இந்த படத்தினை அவர் உருவாக்கி இருக்கிறார்.
