Monday, September 29

இதயத்தை நொறுக்கும் காலை… ஒரு பணிவான வேண்டுகோள் 🕊️-நடிகர்ரஹ்மான்

நடிகர் ரஹ்மான் பதிவு!

இதயத்தை நொறுக்கும் காலை… ஒரு பணிவான வேண்டுகோள் 🕊️

இன்றைய செய்தியில்,

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த செய்தி கேட்டு மிகவும் மன வேதனையடைந்தேன்.

பல சாதாரண மக்களின் உயிர்கள் மிதிவெள்ளத்தில் பலியானது கேட்டு அதிர்ச்சியிலும் மீளா துயரத்திலும் ஆழ்ந்து விட்டேன். இவ்வளவு பேரிழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மறைந்த ஆன்மாக்கள் சாந்தியடைய என் பிரார்த்தனைகள்.

ஆனால், இந்த துயரத்தோடு கவலையும் தோன்றுகிறது. இத்தகைய துயரங்கள் மீண்டும் மீண்டும் ஏன் நிகழ வேண்டும்? ஏன் நம்முடைய குழந்தைகள், பெண்கள், நாமே கூட இத்தகைய பெரும் கூட்டங்களில் ஆபத்துக்குள்ளாக வேண்டும்?
எந்த அரசியல்வாதிக்காகவும் சரி, எந்த நடிகருக்காகவும் சரி, நம் உயிரைப் பறிகொடுக்க வேண்டிய அளவுக்கு இது அவசியம் அல்ல.

நாம் அனைவரும் சற்றேனும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வோம். அடுத்தவர் எந்த சமூகத்தை சேர்ந்தவரானாலும் அவரையும் சேர்த்து பார்த்துக்கொள்வோம். இந்த வேதனையான நிகழ்விலிருந்து இனி நாம் பாடம் கற்போம். உயிரிழந்த அனைவரின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்.
சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்.

பிராத்தனையோடு,
ரஹ்மான்
நடிகர்.

Spread the love