Wednesday, January 21

படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை

திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி சிறுகதை

நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.

புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்கிற சிறுகதையின் புதிய விளக்கமாக இந்த படம் தயாராகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அஞ்ஜோய் சாமுவேல் இப்படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்,

இந்த படத்திற்கான முதல்கட்ட பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது..

படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றன.

தாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கே எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

 

Spread the love