இராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஒரு கிராமம் ஒன்றில் மேலத்தெரு, கீழத்தெரு என இரு பகுதிகள் உள்ளன. அதில் மேலத்தெரு பகுதிக்கும் மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் தலைவராக பிரபுவும், கீழத்தெரு பகுதிக்கு தலைவராக இளவரசும் உள்ளார்கள், இவர்கள் இருவரும் தலைவர்களாக மட்டுமின்றி நண்பர்களாகவும் உள்ளார்கள். ஊருக்குள்ள எந்த ஒரு கட்சி கொடியும், கரை வேட்டியும் வரக்கூடாதுன்னு உறுதியா இருக்காங்க. இதனால் அந்த ஊர்மக்களிடையே எழும் சச்சரவுகள், பிரச்சனைகள் எல்லாம் எளிதாக முடிவுஅடைகின்றன.

ஆனால் அந்த பகுதியில அமைச்சராக இருக்குற தேனப்பன் அந்த ஊர் பகுதியில இருக்குற கருவேல மரங்கள் இருக்கும் இடத்தை எல்லாம் கார்பெரேட் கம்பெனி கிட்ட கொடுத்து பல கோடி ரூபாய் கமிஷன் வாங்க நினைக்குறாரு,அதுனால அந்த தொகுதி எம்.எல்.ஏ வா இருக்குற அருள் தாஸ்.ஊரை இரண்டாக்கி ஊர்மக்களின் அமைதியை குலைக்க முயல்கிறார்.

இந்நிலையில் ஊர் திருவிழாவுக்காக சாந்தனுவின் முறைப் பெண்ணான ஆனந்தி தன் அம்மாவுடன் அந்த ஊருக்கு வருகிறார். சாந்தனுவும், ஆனந்தியும் காதலிக்க அந்த காதலையே காரணியாக வைத்து நண்பர்களிடையும் , ஊர்மக்களிடையேயும் பகைமையை உருவாக்க திட்டமிடுகிறார் அருள் தாஸ் ,ஒரு பக்கம் ஊருக்கு வரப்போற பிரச்சனைய பிரபுவும் , இளவரசுவும் , தடுக்க முயற்சி பண்றாங்க .இறுதியில் சாந்தனு,ஆனந்தி காதல் என்னவாயிற்று ? அந்த ஊருக்கும், மக்களும் என்ன ஆனது ? என்பதுதான் மீதிக் கதை.

கதையின் நாயகனாக புதிய பரிமாணத்தில் செங்குவாக மாற ,கடின உழைப்பை கொடுத்து சாந்தனு பாக்யராஜ் நிறைவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் சஞ்சய், சாந்தனுவுடன் நண்பனாய் இருக்கும்போது பங்காளியாகவும், பகையாளியாய் மாறும் போது வன்மமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்காரு. இவர்களுடன் நடிகர்கள் இளவரசு, தீபா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.ஊர்தலைவராக பிரபு. யதார்த்தமான கதாபாத்திரத்தில் பல பரிமணங்களில் நடிப்பை. சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் ,

மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலமாக மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் விக்ரம் சுகுமாறன்,.இந்த ராவண கோட்டம் வாயிலாக மண் சார்ந்த வாழ்வியலை மாறுபட்ட சூழலில் படமாக்கியுள்ளார், இவரது முயற்சிக்கு உறுதுணையாய், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் ,குறிப்பாக கார்த்திக்நேத்தாவின் அதனை பேர் மத்தில… பாடலும் , வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்துள்ளது,.மேலும் இப்படம் சீமைகருவேல மரங்களை வைத்து மக்களிடம் அரசியல்வாதிகள் ஏற்படுத்தும் விளைவுகளையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் அலசும் படமாகவும் உள்ளது.
