Wednesday, April 29

”குட்நைட்” விமர்சனம்

ஒரு மிடில் கிளாஸ் பேமிலி யா அம்மா ,அக்கா , மாமா ,தங்கைன்னு ஜாலியா, சந்தோஷமா இருக்குற மணிகண்டன் IT companyல வேலை செய்றாரு.ஆனா தூங்கும் போது கீழ்வீட்டுக்கு கேக்கும் அளவுக்கு குறட்டை விடுற குறைபாடு அவர்கிட்ட இருக்கு. இந்த விஷயம் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பழகிப்போகுது. ஆனா ஆபீஸ்ல மோட்டார் மோகன் என்ற அடைமொழியோட எல்லாரும் அவர கிண்டல் பண்றங்க. இந்த விஷயத்துனால காதலிச்ச பொண்ணும் அசிங்கப்படுத்திட்டு போறாங்க. இந்த வேதனைய மாமாவாகவும் நண்பனாகவும் இருக்குற ரமேஷ் திலக் கிட்ட சொல்றாரு.திலக்குடன் சர்வீஸ்க்கு பாலாஜி சக்திவேல் வீட்டுக்கு போக அங்க மீத்தா ரகுநாதை சந்திக்குறாரு . ஒரு கட்டத்துல அவங்களுக்கு அப்பா அம்மா இல்லன்னும், யாருமே இல்லாம தனியா இருக்கான்னும் தெரியுது. சில சந்திப்புகளுக்கு பிறகு இரண்டு பேருக்கும் காதலாகி அது கல்யாணத்தில் முடியுது.தனக்கு இருக்குற குறை மனைவிக்கு தொந்தரவா இல்லன்னு மணிகண்டன் சந்தோஷப்பட , தொந்தரவா இருக்குன்னு சொன்னா கணவன் எங்க வருத்தப்படுவார்ன்னு மீத்தா ரகுநாத் விட்டுக்கொடுக்க, இந்த ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தலே விபரீதமாய் முடியுது.

மணிகண்டன் தனக்கு கிடைத்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் நடித்து நம் கவனத்தில் இடம் பெறுவார். ஆனா மணிகண்டனுக்குள் இப்படி திறமை இருக்கான்னு ஆக பெரிய ஆச்சர்யைத்தை ஏற்படுத்தியிருக்காரு. அவமானம், சந்தோஷம், பரிவு, பாசம் , வெறுப்பு , வேதனை இப்படிபட்ட காட்சிகளில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மீத்தா ரகுநாத்துக்கு கதாபாத்திரத்துக்கு ஏத்த சோகமான முகம், அதிகம் , அதிர்ந்து பேசாமல், மின்னல் போல சிறு சிறு சந்தோஷம் முகத்தில் வெளிப்படுத்தும் நடிப்பு அற்புதம் .

ரமேஷ் திலக் பல படத்துல தனியாக நம்மை கவனிக்க வைத்தாலும் , இந்த படத்துல மணிகண்டனுடன் இருக்கும் sceen ல கலகலப்பாய் மட்டும் இல்லாம, hospital ல தனியா அழும்போது ஒரு குணச்சித்திர நடிகராகவும் தெரியுறாரு. யாரும் யோசிக்க முடியாத கதாபாத்திரத்துல (இயக்குத்துல மட்டும் இல்லாம) தாத்தாவாக பாலாஜி சக்திவேல் முத்திரை பதிச்சு இருக்கார்.மேலும் பக்ஸ் ,ரேச்சல் ரெபோக்கா, உமா ராமச்சந்திரன் , கௌசல்யா, ஜெகன் போன்றோரும் கதாபாத்திரங்களா மாறியதோட படத்துக்கு பக்கபலமா இருந்துஇருக்காங்க.

குறிப்பிட்ட location கதைக்குள்ளே மட்டுமே பயணிக்கவேண்டிய கட்டாயம், அதிலும் தன் திறமையை ஜெயந்த் சேதுராமன் அழகாக தன்னோட ஒளிப்பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார் .படத்தோட இன்னொரு பலம் பரத் விக்ரம் எடிட்டிங் மற்றும் சியான் ரோல்டன் இசை அளவாகவும் , அழகாவும் இருக்கு.

பல வீட்டுல நடக்கும் ஒரு விஷயம் ,அதை படத்தின் கருவாக கொண்டு 2:20 மணி நேரம் சிறுதளவு கூட தொய்வு இல்லாமல் இயக்கி இப்படியும் மக்களை மகிழ்விக்கலாம் என அறிமுக படத்துலேயே அனைவரின் பாராட்டுகளை விநாயக் சந்திரசேகரன் பெற்றுஇருக்கிறார்.வளர்ந்து வரும் நட்சத்திரங்களை நடிக்க வைத்து தன்னோட diague ,screen play ஐ நம்பி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து ,வியாபாரநோக்கம் இல்லாமல் இயக்குனரை நம்பி வித்தியாசமான கதைகளைத்தை ஏற்று நல்ல படம் தரவேண்டும் என்ற நோக்கில் முதலீடு செய்து தயாரித்துள்ள நசரத்பசிலியான், மகேஷ்ராஜ்பசிலியான், யுவராஜ் கணேசன் போன்றவர்களுக்கு பாராட்டுக்கள் .

படத்த பார்த்து விட்டு வந்து  U TURN அடித்து நாளை மீண்டும் பார்க்கலாம் என்று சந்தோசமாய் GOODNIGHT சொல்லிவிட்டு தூங்கலாம்.

Spread the love