சிலம்பம் நூல் வெளியீடு மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழாவிற்கு பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை, மற்றும் பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் பயிற்சிக் கூடம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திரு.V.கிருபாநிதி (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) தலைமை வகித்தார். திரு.பவர் பாண்டியன் ஆசான் (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) மற்றும் திரு.K.கணேஷ்குமார் (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) முன்னிலை வகித்தனர்.
திரைப்படதயாரிப்பாளர் திரு.கலைப்புலி S.தாணு சிலம்பம் நூலை வெளியிட சிலம்பக்கலை பாதுகாவலர் திரு.N.R.தனபாலன் (TMASRDT-Chairman) நுாலை பெற்றுக் கொண்டார்.

சிறப்பு அழைப்பாளர்களாக யாத்திசை பட குழு பங்கேற்றனர். சிலம்பம் விளையாட்டு சான்றிதழை திரு.ராஜா அன்பழகன் MC (நியமன குழு உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி) வழங்கினார்.
