Sunday, April 26

பொன்னியின் செல்வன்-2 விமர்சனம்

பொன்னியின் செல்வன்அமரர் கல்கி அவர்கள் கைவண்ணத்தில் உரு வான பொன்னியின் செல்வன் நாவல் எழுத்து வடிவில் புத்தகமாக வெளிவந்து எண்ணற்ற வாசகர்களை அன்று முதல் இன்று வரை கவர்ந்து வருகிறது,எழுத்து வடிவில் இருந்த இதனை திரைவடிவில் காட்சிபடுத்த பலரும் எடுத்த முயற்சிகள் நிறைவேறாத நிலையில் இயக்குனர் மணிரத்தினம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்தினதின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவானது. முதல் பாகத் தின் மிகப்பெரிய வெற்றி ,பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தினை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தது . தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அம்ச ங்களை பார்க்கும் முன்பாக முதல் பாகத்தில் கதை முடிவடைந்த சூழலை பார்க்கலாம், பெரிய பழுவேட்டரையரின் ஆணைக்குக்கேற்ப ,இலங்கையில் இருக்கும் சோழ இளவரசன் அருண்மொழிவர்மனை சிறைபிடித்து கொண்டு வர செல்லும் எதிரிகள் அருண்மொழி என நினைத்து தவறுதலாக வந்தியத்தேவனை சிறைபிடித்து செல்ல, வந்தியத்தேவனை காப்பாற்ற கலத்திற்கு அருண்மொழிவர்மன் போக . அப்போது கடலில் கலம் மூழ்குகிறது.இறுதியில் வந்தியத்தேவன் அருண்மொழிவர்மனை தஞ்சைக்கு அழைத்து வந்தாரா? இல்லையா.?.. என்ற பல கேள்விகுறிகளுடனும் அதன் பின் என்ன நடக்கும் என்ற எண்ணற்ற எதிர்பார்ப்புகளுடனும் முதல் பாகம் முடிந்திருந்தது,

இரண்டாம் பாகத்தில், கடல் புறத்தில் ஊமை ராணியால் அருண்மொழிவர்மன் காப்பாற்றப் படுகிறான். ஆனால் அவர் இறந்து விட்டதாக தகவல் பரப்பப்படவே . இந்த செய்தியால் சோழப் பேரரசில் நிறைய குழப்பங்கள் ஏற்படுகிறது , அருண்மொழிவர்மன் உயிரோடு இருக்கும் தகவல் பாண்டிய ஆபத்துதவிகளுக்கும் தெரிகிறது. ஆதித்த கரிகாலன், குந்தவை மற்றும் சோழ அரச குடும்பதினர் , அருண்மொழிவர்மனை மீட்க திட்டமிடுகிறார்கள்,இன்னொரு பக்கம் சோழர் குலத்தை அழிக்க பாண்டிய ஆபத்துதவிகளோடு இணைந்து சூழ்ச்சியில் இறங்குகிறார் நந்தினி , ஆதித்ய கரிகாலனை வீழ்த்தி மதுராந்தகனை சோழ அரசின் மன்னராக்க சோழ வம்சத்தின் தலைவர்களும் முயற்சி செய்கிறார்கள் இதன் பின் ஆதித்ய கரிகாலன் , அருண்மொழிவர்மன் என்னவானார்கள்? ஊமை ராணி என்பவர் யார் ?அவர் அருண்மொழிவர்மனை ஏன் காப்பாற்றவேண்டும் ? நந்தினி உண்மையில் யார்? நந்தினியின் சபதம் என்னவானது?என்ற பல வினாக் களுக்கு விடையினை 2 ஆம் பாகம் தருகிறது.lllllll

தன்னுடைய உடல் மொழியாலும் உணர்வுபூர்வமான பாவனைகளாலும் எழுத்தில் படித்து ரசித்த ஆதித்த கரிகாலனை நேரில் வியந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார். பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தில்,ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் காட்சிகள் குறைவான காலஅளவில் இடம்பெற்று இருந்தாலும் இந்த இரண்டாம் பாகத்தில் காதல், வீரம், வெற்றி, பாசம் என் பல பரிமாணங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக அமைக்கப்பட்டிருந்தது ,அந்த கதாபாத்திரத்தை விக்ரம் தன் பண்பட்ட நடிப்பால் மேலும் மெருகேற்றி மிளிர செய்துள்ளார்

பன்மொழிபடமான இந்த பொன்னியின் செல்வனில் இவருக்கு மாற்றாய் இவரை நடிக்கவைத்திருக்கலாம் என்ற மற்றுமொரு சாய்ஸ் இல்லாத வண்ணம் கதாபாத்திரத்துக்கு முற்றிலும் பொருந்தியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
தன்னுடைய திரைப்பயணத்தில் முக்கிய இடத்தை இந்த படம் தரும் என்ற கணிப்பில் ஒட்டுமொத்த தன் உழைப்பை தன் கதாபாத்திரத்துக்கு கொடுத்து ஜெயம் ரவி சிறப்பாக நடித்துள்ளார்.


கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், குமான்,சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு ,ஐஸ்வர்யா லெக்ஷ்மி கிஷோர் என பலரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தாங்கள் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயரை தாங்கி நிறைவாக நடித்திருக்கிறார்கள்.


ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ,கதை நடைபெறும் களத்துக்கு ரசிகர்களை கொண்டு செல்கிறது, வரலாற்று வாழ்வியலை நன்கு பதிவு செய்துள்ள ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ,நாவலாக கதையினை வாசித்தவர்களுக்கு ஏற்பட்ட உணர்வுக்கு இணையாக திரையில் காட்சியாய் பார்த்தவர்களுக்கும் ஏற்படும் வகையில் தந்து பங்களிப்பை கொடுத்துள்ளார். வரலாற்று புனைவு கதைக்கு முக்கியமானது கலை வடிவமைப்பு ஆகும் அதை தோட்டா தரணி செவ்வனே செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு கதையோட்டத்தின் பாதை மாறாது காட்சிகளை நன்கு இணைத்து தொகுத்துள்ளது.

அமரர் கல்கியின் நாவலை படமாக்க பலரும் நினைத்து அது நிறைவேறாமல் போன நிலையில், அதனை சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்கள், பொருத்தமான நடிகர்கள், ஜெயமோகனின் சிறந்த வசனங்கள், துணை கொண்டு பிரமாண்டமான காட்சிகளுடன் படமாக்கி இரண்டு பாகங்களாக உருவாக்கி, தமிழ் சினிமாவில் தன்னுடைய பெயரை நன்கு பதிவு செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். முதல் பாகத்தில் போடப்பட்ட முடிச்சுகள் அனைத்தையும் நீக்கிவிடவேண்டும் என்ற முனைப்புடன் இரண் டாம் பாகம் சென்றாலும் திரைக்கதையில் இன்னுமும் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களில் சில பேருக்கு படம் நிறைவை தராமல் இருக்கலாம் ஆனால் எழுத்துக்கும் திரைக்காட்சிக்கும் ,திரை நேரத்துக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொண்டால் அவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்

Spread the love