மாஸ்டர் மகேந்திரனும்அவரது நண்பர்களும் சமையலுக்கான யூடியூப் சேனல் நடத்துகிறார்கள், மகேந்திரன் அந்த சேனல் வழியாக கிடைக்கும் ரசிகையை காதலிக்க ஆரம்பிக்கிறார்,இந்தசூழ்நிலையில் பக்கத்து ஊரில் யாராவது சாதிவிட்டு சாதி காதலித்து திருமணம் செய்தாலோ, அல்லது காதலர்கள் ஊரை விட்டு ஓடிப் போனாலோ அந்தக் காதலர்கள் ஒரு பேயால் கொல்லப்படுகிறார்கள்,அந்தப் பேயை பற்றி அறிந்து கொள்ள ஊரின் இன்ஸ்பெக்டர், மகேந்திரனையும் அவரது நண்பர்களையும் அங்கு அனுப்புகிறார்.கடைசியில் அந்தப் பேயை பற்றி அவர்களால் தெரிந்துகொள்ள முடிந்ததா? அந்தப் பேய் என்ன காரணத்துக்காக இந்தக் கொலைகளை செய்கிறது..? கடைசியில் அந்தப் பேயின் நிலை என்னவாயிற்று …? என்பதுதான் இந்தப் படத்தின் மீதி கதை.

இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன், நோபிள் ஜேம்ஸ், ஶ்ரீனி, காவ்யாஅறிவுமணி, ஆரத்தி பொடி ஆகியோர் நடித்துள்ளனர். மாஸ்டர் மகேந்திரன் தன்னுடைய பங்குக்கு குறைவில்லாமல் நடித்துள்ளார்,எந்த விதமான லாஜிக்கும் இல்லாத கதையில் முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கொண்டு காட்சிகளை அமைத்து படத்தை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார் நா. அருண் கார்த்திக்,இவருக்கு தங்களால் முடிந்தவரைக்கும் பங்களிப்பை ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் துவாரகா தியாகராஜூம் வழங்கியுள்ளார்கள்.
லாஜிக் இல்லாத மேஜிக் நிறைந்த காமெடி ஹாரர் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் இந்த ரிப்பப்பரியை பார்க்கலாம் .
