1989ல் ரிலீஸ் ஆகியிருந்தாலும் இன்றைக்கும் ரசிகர்களிடையே பிரபமாய் உள்ள காமெடி வசனமான ‘இந்த கார வெச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வெச்சிருக்கா…’ என்ற கவுண்டமணி-செந்திலின் காமெடி வசனத்தை நினைவூட்டும் வகையில் , காரை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு சொப்பன சுந்தரி என தலைப்பு வைத்துள்ளார்கள், அது தவிர படத்தின் கதைக்கும் டைட்டிலிற்கும் தொடர்பு இல்லை.

நகைக்கடையில் வேலை பார்க்கும் சாதாரண குடும்பத்து பெண்ணான அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவர் தன்னுடைய அப்பா அம்மா மற்றும் மாற்றுத் திறனாளி சதோதரியுடன் வாழ்ந்துவருகிறார், காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன் தனியே சென்றுவிட்ட நிலையில் அவருக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. பரிசு விபரம் தெரிந்து கொண்டஅகல்யாவின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) அண்ணன் துரை (கருணாகரன்)அதை கைப்பற்ற முயற்சிக்கிறார். இறுதியில் அந்தபரிசு கார் யாருக்கு கிடைத்தது ? அண்ணன் அந்தக் காரை கைப்பற்ற செய்த முயற்சி என்னவாயிற்று ?அது மட்டுமின்றி அந்த காருக்குள் இருக்கும் ஒரு ட்விஸ்ட் பற்றியும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கான விடைகளை சுவையாக படத்தின் மீதி கதையில் தெரிந்துகொள்ளலாம் .

அகல்யா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக யதார்த்தமான நடிப்பை கொடுத்து முழுகதையினையும் தாங்கி நன்கு நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து தீபா, லக்ஷமி பிரியா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக தேசிய விருது வாங்கிய லட்சுமி, தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் நன்கு நடித்து இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின்அம்மாவாக தீபாவும் தன்னுடைய ஸ்டைலில் உடல் மற்றும் குரல் மொழியில் இயல்பாக நடித்துள்ளார்.
‘லாக்கப்’ பட இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இந்த திரில்லர் காமெடி கதைக்கு பக்கபலமாய் இசையமைப்பாளர் அஜ்மல் மற்றும், பின்ணியிசை வழங்கியுள்ள விஷால் சந்திரசேகரும் நன்கு பணியாற்றியுள்ளார்கள் மேலும் ஒளிப்பதிவாளர்கள் பாலமுருகன் & விக்னேஷ்ராஜகோபாலனும் கதைக்கு ஏற்ற காட்சிஅமைப்புகளை நிறைவாக அமைத்துள்ளார்கள்.
காமெடியும், த்ரில்லரும் கலந்த கதையம்சம் கொண்ட சொப்பனசுந்தரி படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து கோடைவிடுமுறையை கொண்டாடி பொழுதுபோக்கலாம்.
