Wednesday, April 29

2023 – 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல் 23-4-2023 அன்று நடைபெற உள்ளது.

2023 – 2026 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தேர்தல் வருகின்ற 23-4-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில்…

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர்
திரு. RK. செல்வமணி அவர்கள் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடுகிறார்.
அவருடைய தலைமையிலான அணியில்

பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு,
தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர்
திரு. B. சுவாமிநாதன் அவர்களும்,

பொருளாளர் பொறுப்பிற்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர்
திரு. T. S. செந்தில்குமார் அவர்களும்,

துணைத் தலைவர்கள் பொறுப்பிற்கு:

மேக்கப் மேன் யூனியன் தலைவர் திரு.சபரிகிரிசன் அவர்களும்,
இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தலைவர்
திரு. தினா அவர்களும்,

கலை இயக்குநர்கள் சங்க செயலாளர்
திரு. மோகன மகேந்திரன் அவர்களும்,

ஸ்டண்ட் யூனியன் தலைவர்
திரு. தவசிராஜ் அவர்களும்,

நடன இயக்குநர்கள் சங்கத் தலைவர்
திரு. மாரி அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இணைச் செயலாளர்கள் பொறுப்பிற்கு:

திரு. ராமலிங்கம் அவர்களும்,
திரு. புருஷோத்தமன் அவர்களும்,
திருமதி. சாஜிதா அவர்களும்,
திரு. ராஜ ரத்னம் அவர்களும்,
திரு. ராமச்சந்திரன் அவர்களும் போட்டியிடுகின்றனர்.

இன்று அனைவரும்
திரு. RK. செல்வமணி அவர்களின் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Spread the love