Thursday, January 15

செங்களம் (இணைய தொடர்)-விமர்சனம்

ஒரே குடும்ப உறுப்பினர்கள்  தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தின்   நகராட்சி மன்ற தலைவர் பதவியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக  கைப்பற்றிக்கொண்டுள்ளார்கள் ,அந்த தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினருக்கு கூட இல்லாத செல்வாக்கும் ,பெயரும் மக்களிடையே அந்த நகராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. பல வருடங்களாக தலைமுறை ,தலைமுறையாக மேலாக தொடர்ந்து ,அந்த குடும்பத்தின் மீது மக்களுக்கு இருக்கும் அரசியல் மதிப்புக்கும் , மரியாதைக்கும் நிரந்தரமாக முடிவு கட்டி , விருதுநகர் நகராட்சியை தங்கள் வசமாக்க அரசியல் கட்சிகள் திட்டமிடுகிறது.

தந்தைக்கு பின் புதல்வன் நகராட்சி மன்ற தலைவராகும் ராஜமாணிக்கத்துக்கும் ,சூர்ய கலாவிற்கும் (வாணி போஜன்) திருமணம் நடக்க , அதன்  பின் அவர்கள் தேனிலவுக்கு  செல்லும்போது ஏற்படும் விபத்தில்,  ராஜ மாணிக்கம் இறக்கிறார், அந்த விபத்தில் உயிர்பிழைக்கும்  சூர்யகலாவை அடுத்த  அரசியல்  வாரிசாக   தேர்தலில் நிற்க வைக்க பெரியவர் முடிவு செய்ய குடும்பத்துக்குள் குழப்பம்  ஏற்படுகிறது, சூர்யகலாவிற்கும் பதவி மீது ஈர்ப்பும் ஏற்படுகிறது அவருடைய அரசியல் வளர்ச்சிக்கு அவரது தோழி சாதுர்யமான முறையில் பாதை அமைத்துத்தருகிறார், இதன் பின் சூர்ய கலா என்ன ஆனார்? கடைசியில் நகராட்சி மன்றத்தின்  தலைவராக தேர்தலில்  நின்றவர்  யார்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தருகிறது செங்களம் தொடரின் மீதி கதை

செங்களம் தொடரில் கலையரசன், வாணி போஜன், பவன், சரத் லோகிதஸ்வா,வேலா ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் என பெரிய  நட்சத்திரபட்டாளமே நடித்துள்ளது இதில் நடித்த ஒவ்வொருவரும்  தங்களுக்கு கொடுக்கப்பட்ட   கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு  ஏற்ப நன்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் குறிப்பாக வாணி போஜனுக்கு  கொடுக்கப்பட்ட சூரிய கலா எனும் பாத்திரத்தை  அவர் நன்கு பயன்படுத்தியுள்ளார், கலையரசன் இந்த தொடரில் ராயராக தன்னுடைய யதார்த்தமான  நடிப்பை சிறப்பான முறையில் வெளிபடுத்தியுள்ளார். நாச்சியாராக நடித்துள்ள ஷாலியின் நடிப்பு தனி கவனம் பெரும் வகையில் உள்ளது.

சுந்தரபாண்டி யன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இந்த தொடரை  விறுவிறுப்பான பொலிடிகல் திரில்லராக இயக்கியுள்ளார்

தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பான  “செங்களம்” இணையத் தொடரை  Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிக்க  இந்த தொடருக்கு  தரண் இசை அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரனும் படத்தொகுப்பாளர் பிஜு. V. டான் போஸ்கோவும் தொடரின் சிறப்பான காட்சி அமைப்புகளுக்கும் ,வேகத்துக்கும்  உறுதுணையாக நின்றுள்ளார்கள் .

அரசியல் ,அதிகாரம், அதற்க்கான போட்டிகளை விறுவிறுப்பான கதைகளத்துடன் விவரிக்கும் பொலிடிகல் த்ரில்லரான இந்த செங்களம் எல்லாத்தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் .

Spread the love