குருவிராஜன்(அர்ஜை) ஒரு கேங்க்ஸ்டர். சிறுவயதில் சென்னைக்கு வந்து தன்னுடைய திறமையாலும், முயற்சியாலும் கேங்க்ஸ்டராக உயரும் அவர் காவல்துறை மற்றும் அரசியல் சக்திகளுக்கு சவால்விடக்கூடிய பலம் நிறைந்தவராக உள்ளார் ,இது ஒருபுறம் இருக்க ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வரும் ஆஷிக் குருவிராஜனை யார் என்றே தெரியாமல் தாக்கிவிடுகிறார் ,இதன் பிறகு, அவர்கள் வாழ்க்கையில் நடித்தவை என்ன? என்பதை சொல்லுகிறது மீதிக்கதை.
குருவிராஜனாக அர்ஜை கதாபாத்திரத்துக்கு ஏற்பட்ட உடல் மொழியுடன் சிறப்பாக நடித்துள்ளார்,இந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தி தரும்.

விஜே ஆஷிக் இந்த படத்தில் இயல்பாக நடித்துள்ள தான் ஏற்ற கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்த்துள்ளார்
மேலும் சுரேஷ்சரவர்த்தி, ஷா ரா.போன்றோரும் கொடுக்கப்பட்ட கதாப்பாத்தரங்களில் தங்கள்து தனித்தி றமையை வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.

கேங்க்ஸ்டரின் கதையினை காமெடியுடன், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானநட்சத்திரங்களுடன், விறுவிறுப்பான காட்சிகளுடன் இயக்கியுள்ளார் இயக்குனர் மதிவாணன்.
இயக்குனரின் கதைகளத்துக்கு ஏற்றாற்போல மூன்ராக்சின் இசையும் பிரண்டன் சுஷாந்தின் ஒளிப்பதிவும் கதையின் வழியே நன்கு பயணித்துள்ளது.

“SHORTFLIX” ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஷூட் தி குருவி (“SHOOT THE KURUVI”) பல புதிய இளைய கலைஞர்களுக்கு நம்பிக்கையை தரும், மேலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடிக்கும்.

