அருணும் (உதயநிதியும்) அவரது நண்பரும் வாடகைக்கு வீடு தேடி அலைந்து ஒரு கட்டத்தில் வீடு ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள் அதே வீட்டில் ஏற்கனவே தங்கி உள்ள சோமு (பிரசன்னா) கொஞ்சம் சில நாட்களில் வீட்டை காலி செய்துவிடுவார் என தெரிந்த பின்பு அதே வீட்டிலேயே தாங்களும் குடியேறுகிறார்கள், அங்குள்ள பார் ஒன்றில் சோமுவும் , ஜகனும் (சதீஷ்) சேர்ந்து குடித்துக்கு கொண்டிருக்கும் வேளையில் , அருண் தன் காதலியிடம் போனில் பேச வெளியே செல்லும்போது விபத்துக்குள்ளான காரை ஓட்ட முடியாமல் தவிக்கும் பெண்ணுக்கு உதவி செய்கிறார் , அவரே அந்த பெண்ணை நேராக வீட்டில் கொண்டு விட முடிவு செய்கிறார். இருவரும் அந்த வீட்டுக்கு செல்கின்றனர்.அந்த உதவியே அருணுக்கு எப்படி பிரச்சினையாக மாறுகிறது? எந்த பெண்ணுக்கு உதவி செய்ய அருண் போனார் ? தன்னுடைய பிரச்சினைகளிருந்து அருண் எப்படி வெளிவந்தார்? – இது போன்ற வினாக்களுக்கு விடை தருகிறது மீதி படத்தின் கதை .

கதையின் நாயகனாய் அருண் என்னும் கதாபாத்திரத்தில் உதயநிதி இயல்பான நடிப்பை வழங்கி உள்ளார். சிக்கல்களில் மாட்டி கொண்டு தவித்தாலும் , அந்த சிக்கல்கலிருந்து திறமையாக மீண்டு வருவது என கதாபா த்திரத்துக்கு ஏற்ற நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். அடுத்தபடியாக சிறப்பான தன்னுடைய நடிப்பின் மூலம் தனி கவனம் பெறுகிறார் நடிகர் பிரசன்னா.மேலும் பூமிகா, ஸ்ரீகாந்த் ,ஆத்மிகா ,மாரிமுத்து, சிந்தும் சதீஷ், பழ.கருப்பையா, சென்ராயன் போன்றோரும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை நன்கு பயன்படுத்தி தங்கள்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளார்கள்.

திரில்லர் கதைகளுக்கு தேவையான இரவுக் காட்சிகள் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் பாராட்டும்படியுள்ளன. சான் லோகேஷின் படத்தொகுப்பும் ,சித்துகுமாரின் இசையும் படத்தின் காட்சி அமைப்புகளுக்கு விறுவிறுப்பை தருகிறது.
அருள்நிதி நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்னும் வெற்றிபடத்தை தந்த இயக்குனர் மு.மாறன் இந்த திரைப்படத்தை சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் ,விறுவிறுப்பான காட்சிகளுடன் இயக்கியுள்ளார்.
த்ரில்லர் கதை விரும்பும் ரசிகர்களின் மனதில் ‘கண்ணை நம்பாதே’படம் நிச்சயம் இடம் பெறும் .
