Tuesday, January 20

குடிமகான்-விமர்சனம்

படத்தோட தலைப்பை கேட்டோ அல்லது பார்த்தோ பயந்துடாதீங்க. படத்த பாக்காம போனா என்னைக்காவது ஒரு நாள் ஆகா பக்கா பொழுது போக்கான படத்தை பாக்காம போயிட்டமேன்னு வருத்தப்படுவீங்க.
விஜய் சிவன் ATM மெஷின்ல பணத்த full பண்ணுற ஏஜென்ஸ்ல வேலை செய்யுற நடுத்தரவர்க்கத்துக்குள் வாழும் ஒருத்தர் அவருக்கு உடல்ல மிகவும் அரிதான ,வித்தியாசமான ஒரு குறைபாடு இருக்கு . அது என்னென்ன குடிப்பழக்கமே இல்லாத அவருக்கு டீ ,காபி , கூல் டிரிங்க்ஸ் இப்படி எதை குடிச்சாலும் உடனே போதை ஆகிடுவார். ஆனா எவ்வளவு சரக்கு அடிச்சாலும் போதை ஆகமாட்டாரு. இந்த விஷயம் அவருக்கு இருக்குனு மத்தவங்களுக்கும் தெரியாது . இதனால அவர குடிகாரன்னு நினைக்குறாங்க. நான் குடிக்குலேன்னு அவர் சொல்லறாரு ஆனா அத த அவர் மனைவி உட்பட யாரும் நம்பமாட்டுறாங்க.
இந்த சமயத்துலதான் ஒரு நாள்ATM க்கு போறாரு…. போன இடத்துல டீ குடிக்குறாரு. போதையாகி போக, 100 ரூபாய் வைக்கவேண்டிய இடத்துல 500 ரூபாய் வைக்குறாரு அத சரியாய் பிக்ஸ் பண்ணாம போறாரு. இதனால 100 ரூபாய் எடுக்க போனா பல ஆயிரம் வருது… பல லட்சம் நஷ்டமாக அவருக்கு வேலையும் போகுது . இந்த சமயத்துலதான் அவருக்கு என்ன பிரச்சனைன்னு தெரிய வருது , வேற எந்த வேலைக்கும் போகாம இருக்குற விஜய் எப்படியாவது அதே வேலையில சேரணும் முடிவு பண்றாரு. லாஸ் ஆனா பணத்த திருப்பி கொடுன்னு சொல்லுறாங்க. இதனால யார் யார் பணத்த எடுத்தாங்களோ அத நமோ நாராயணன் அவரோட உதவியாளர்களோட உதவியோட பணத்தை திருப்பி கேக்க போறாரு. கடைசில அவங்க எக்ஸ்ட்ரா வந்த பணத்த திருப்பிக்கொடுத்தாங்கள? அவருக்கு திரும்பி வேலை கிடைச்சதா ? அவருக்கு ஏற்பட்ட நோய் சரியாயிடுச்சி? இதுதான் படத்தோட இரண்டாம் பாதி.

படத்தோட கதாநாயகன் விஜய் சிவன் நடிப்பு மட்டுமல்ல தோற்றமும் யதார்த்தம். கதாபாத்திரத்துக்கு மிகச்சரியான பொருத்தம். மிடில் கிளாஸ்ல இருக்குற ஒரு மனைவி எப்படி இருப்பாங்களோ அப்படியே இருக்காங்க சாந்தினி, அவங்க நடிப்பு உட்பட. என்ன பிரச்சனை நடந்தா எனக்கு என்னன்னு ?தனி உலகத்துல தந்தையாக சுரேஷ் சக்கரவர்த்தி நடிச்சி இருக்காரு. படத்தோட இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கும் நமோ நாராயணன் மற்றும் அவரது உதவியாளர்கள் (குறிப்பா அவசரம் கேரக்டர்ல நடிச்ச(ஹானஸ்ட்ராஜ்) அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இந்த படத்தோட ஒன்லைன் புதுசா, வித்தியாசமா இருக்கு. இந்த கதையும், காட்சிகளும், அதுக்கு உறுதுணையா இருக்கிற நடிகர்களும் நம்மை சிரிக்கவைத்து ,நம்மையும் அறியாமல் கைதட்ட வைச்சி , வயிறு வலிக்க செய்து சந்தோஷமா நம்பள வழி அனுப்பி வைச்சி இருக்காங்க. இப்படி ஒரு குறைபாடு இருக்கிறதான்னு நம்பமுடியாதவங்களுக்கும் நிரூபிச்சு இருக்காங்க .

படத்தின் தயாரிப்பாளர், தொழில்நுட்ப கலைஞசர்களுக்கு தனித்தனியான வாழ்த்துக்கள்.ஸ்ரீகுமாரின் எழுத்தில் என் பிரகாஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு இயக்குனர் மெய்யேந்திரன் ,இனச தனுஜ்மேனன் இவர்களிருவரும் இயக்குனரின் கதை நகர்வுக்கு பெரிதும் துணைநின்றுள்ளார்கள் , வித்தியாசம் என்கிற வார்த்தைய பலபேருக்கு சொல்லுவாங்க. ஆனா அது வார்த்தையோடு நிக்கும். எப்படின்னா எ.டீ.ம் back drop, நடுத்தர வாழ்வியல் , அதுல உடம்புல ஒரு குறைபாடு, வேலையின்மை , அதை திரும்பி பெற போராட்டம், இப்படி சீரியஸ் நிகழ்வுகளை அப்படியே தலைகீழக புரட்டி போட்டு நகைச்சுவையாகயும் சொல்ல முடியும்ன்னு நிரூபிச்சி இருக்காரு இயக்குனர் பிரகாஷ் . இப்படி ஒருகுறைபாடு சாபம் இல்ல வரம், இது போல பல வசனங்கள் நகைச்சுவையின் உச்சம் . அதுவும் கடைசி காட்சியிலே கூட ஒருத்தர் மதுவுடனும், ஹீரோ cool drink குடிச்சிட்டு போதை ஆவது highlight. குடிமகான் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.

Spread the love