தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்படும் ‘மெமரீஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஒருவனது வாழ்க்கையில் நடைபெற்றிருக்கும் மர்மங்களை நாயகன் வெற்றி, பார்வையாளர்களுக்கு சொல்கிறார். அப்படிப்பட்ட கதைகள் காட்சிகளாக திரையில் விரிவடையும்போது நமக்குக் காட்டப்படும் கதைகளில் வெற்றியே ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் வந்து பல கெட்டப்களிலும் வித்தியாசத்தினைக் காட்டி நன்கு நடித்துள்ளார்.

தனது பழைய நினைவுகளை இழந்த நாயகன் வெற்றி ஒரு செய்தி தாளின் மூலம் 4 கொலைகளை செய்த குற்றவாளியை போலீஸ் தேடிக்கொண்டிருப்பதாக செய்தி அறிகிறார் அதில் வெற்றியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது அதனை கண்டு அதிர்ச்சி அடையும் வெற்றியிடம் உனக்கு 17 மணி நேரம் உள்ளது அதற்குள் உன்னுடைய பழைய நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தி சொல்லும்படி கேட்கப்படுகிறது, இல்லை எனில் அவருடைய உயிருக்கு ஆபத்து என்றும் சொல்லப்படுகிறது ,குறிப்பட்ட அந்த நேரத்தில் வெற்றி தனது பழைய நினைவுகளை மீண்டும் நினைவு படுத்தி அவரின் உயிரை காப்பாற்றிகொன்டாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
மர்மங்கள் நிறைந்த இந்த உளவியல் பாணி படத்தை இயக்குநர்கள் ப்ரவீனும், ஷ்யாமும் சிறப்பாக இயக்கியுள்ளார்கள் இரு நாயகிகளாய் பார்வதியும் டயானாவும் ,மேலும் ரமேஷ் திலக், ஹரீஷ் பெராடி, ஆர்.என்.ஆர்.மனோகர், என மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் அர்மோ மற்றும் கிரண் நிபிடல் இருவரும் கதையின் நகர்வுக்கு ஏற்ப காட்சிகளை நன்கு படமாய்க்கியுள்ளார்கள் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாசும், படத்தொகுப்பாளர் சேன் லோகேசும் இயக்குனர்களின் பங்களிப்புக்கு தாங்களும் உறுதுணையாய் நின்றுள்ளார்கள்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களம் கொண்ட மெமரீஸ் இளம் ரசிகர்களை கவரும் .
