சென்னை துறைமுகத்தில் க்ரேன் ஆப்ரேட்டராக அகிலன் என்னும் கதாபாத்திரத்தில் (ஜெயம் ரவி) நடித்துள்ளார் , அகிலனுக்கு, கடத்தல் மன்னன் கபூர் (தரூண் அரோரா) மூலமாக அசைமென்ட் ஒன்று வழங்க ப்படுகிறது.இறுதியில் அகிலன் தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்டை முடித்தாரா ? ‘கிங் ஆஃப் இந்தியன் ஓஷன்’ என்ற பட்டம் அவருக்கு கிடைத்ததா? இப்படி பல வினாக்களுக்கு விடை தரும் வகையில் படத்தின் மீதி கதை உள்ளது .இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் மாணவரான இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இதற்க்கு முன்பு பூலோகம் படத்தில் ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக பரிமளிக்க வைத்த அவர் இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு மற்றுமொரு சிறப்பான ஆக்ஷன் கதையினையும் கதாபாத்திரத்தையும் அவர் கொடுத்துள்ளார் மாறுபட்ட முற்றிலும் ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி சிறப்பாக நடித்துள்ளார் .

படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார்,கொடுக்கப்பட்ட பாத்தி ரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார்.படத்தின் இன்னொரு நாயகியாக வரும் தன்யா ரவிச்சந்திரனும் தனிக்கு கிடைத்த காட்சிகளில் நன்கு ஸ்கோர் செய்துள்ளார் மற்றும் ஹரீஷ் பேரடி, சிராக் ஜானி, மைம் கோபி, தருண் அரோரா, ஹரீஷ் உத்தமன் போன்றோரும் நன்கு நடித்து கதைக்கும் அதன் கட்சி அமைப்புக்கும் பலம் சேர்த்துள்ளார்கள் .

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவில் கடலும் கப்பலும் துறைமுகங்களும் அடங்கிய இடங்கள் நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது இசையமைப்பாளர் சாம் சி.எஸ் கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளார் .

ஜெயம் ரவிக்கு புதிய பரிமாணம் கொடுத்துள்ள இந்த அகிலன் அனைவரையும் வசப்படுத்துவான்.
