Wednesday, January 21

அடுத்தப் படத்தை இந்தியன் சூப்பர் ஸ்டார், அல்லு அர்ஜூனுடன் அறிவித்துள்ளனர்!

MASSIVE! தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தங்களது அடுத்தப் படத்தை இந்தியன் சூப்பர் ஸ்டார், அல்லு அர்ஜூனுடன் அறிவித்துள்ளனர்!

இந்தியாவின் பவர்ஹவுஸ்களான தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒரு மிகப்பெரிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, இணை தயாரிப்பாளர் ஷிவ் சனானா மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் இந்த மிகப்பிரம்மாண்டமான படத்தை முறையாக சாத்தியப்படுத்த சந்தித்தனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கும் சந்தீப் வாங்காவின் ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பை அல்லு அர்ஜூன் முடித்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

Spread the love