Tuesday, April 28

தக்ஸ் – விமர்சனம்

 சிறைகளத்தை கதைக்களமாக கொண்ட கதை

2005ஆம் ஆண்டில் நாகர்கோவிலின் சிறைச்சாலையில் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக ஹிருது ஹாரூன் சிறையில் அடைக்கப்படுகிறார். தன்னுடைய காதலி அனஸ்வரா ராஜனுக்காக சிறையில் இருந்து தப்பிக்க அவர் முடிவு செய்கிறார், அதே சிறையில் உள்ள பிற ஆயுள் தண்டனை கைதிகளையும் இந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டு சிறையிலிருந்து தப்பிக்க பிளான் போடுகிறார் ,அவரது திட்டம் கை கூடியதா? சிறையிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதையாகும்.

கதையின் நாயகன் ஹிருது ஹாரூன் தன்னுடைய கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சிறந்த நடிப்பை  சீரிய முறையில் வழங்கி ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார்.அடுத்த மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹாவும் தன் பங்குக்கு குறைவு இல்லாமல் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார், மற்றும் அனஸ்வரா ராஜன், சிறை அதிகாரியாக வரும் ஆர்.கே.சுரேஷ், சக கைதியான முனிஷ்காந்த், பி.எல்.தேனப்பன் என அனைவரின் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை நன் முறையில் வெளிப்படுத்தியுள்ளார்கள்

முதல் படமான ஹே சினாமிகாவில் காதலை களமாக கொண்டு படம் தந்த இயக்குநர் பிருந்தா, இரண்டாவது படமான தக்ஸில் முழு நீள ஆக்‌ஷன் விருந்தை கொண்ட கதை களத்தில் சிறப்பான படத்தை இயக்கியுள்ளார் ,சாம் சி.எஸ் இசையமைக்க, பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.ஒளிப்பதிவு, பிரியேஷ்குருசாமி இம்மூவரும் விறுவிறுப்பான கதைக்களத்துக்கு தேவையான அம்சங்களை வழங்கி உள்ளார்கள் கதையின் மையபொருளாக உள்ள சிறைச்சாலையினை சிறப்பான கலை நயத்துடன் அருமையாக உருவாக்கியுள்ளார்கள்.

வேகமும், விறுவிறுப்பும் கொண்ட இந்த படம் இளம் ரசிகர்களை வெகுவாக கவரும்.

Spread the love