தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வரும் சத்யாவுக்கும் (ஆர்.ஜே பாலாஜி), இஷா தல்வாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில்,ஒரு நாள் அவருடைய காரில், தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஒளிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் . தனது உயிருக்கு ஆபத்து என்றும் சிறிது நேரம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க உதவும்படியும் தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) வேண்டுகோள் விடுக்கிறார். ஆரம்பத்தில் தயங்கும் சத்யா (ஆர்.ஜே. பாலாஜி) பிறகு பரிதாபப்பட்டு அடைக்கலமும் தருகிறார்.இதனால் அவருக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களில் இருந்து சத்யா(ஆர்.ஜே.பாலாஜி) மீண்டு எப்படி வெளி வந்தார்? , தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) எதனால்?எந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டார் ?இது போன்ற விடை தெரிய வினாக்களுக்கு தீர்வை சொல்லுகிறது மீதி படத்தின் கதை.

தான் இதுவரை நடித்த படங்களில் தன்னுடைய டைமிங் காமெடியினாலும் சரவெடி தொடர் பேச்சினாலும் ரசிகர்களை கவர்ந்து இருந்த ஆர்.ஜே பாலாஜி சீரியஸான கதாபாத்திரத்திலும் தன்னால் பரிமளிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாய் புதிய பரிமாணத்தில் கதையின் நாயகனாய் சிறப்பாக நடித்துள்ளார் .

மாறுபட்ட, வேறுபட்ட கதாபாத்திரங்களில் பல படங்கள் செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்திலும் கதாபாத்திரத்துக்கு உகுந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ,மேலும் இஷா தல்வார் ,ராதிகா, விவேக் பிரசன்னா, ஜார்ஜ் மரியான், தமிழரசன் உட்பட பலரும் அவர்களுக்கான கதாபாத்திரங்களில் தங்களது பணியினை நன்கு வெளிகொண்டுவந்துள்ளார்கள் ,பொதுவாக திரில்லர் கிரைம் கதைகளுக்கு ஒளி மற்றும் ஒலியின் பங்களிப்பே இயக்குனரின் கதை சொல்லும் நேர்த்திக்கு பக்கபலமாய் அமையும். அந்த வரிசையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் ஒளிப்பதிவாளர் யுவாவின் பணி, இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமாருக்கு உறுதுணையாக இந்த படத்தில் அமைந்துள்ளது என்று சொல்லலாம் .
விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுடன்கூடிய திரில்லர் படத்தில் , வேறுவிதமான கதைக்களத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த நாயகனை, மற்றொரு புதிய ஜானரில் நடிக்க வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் ஜெயன் கிருஷ்ணகுமார் .

ஆர்.ஜே பாலாஜிக்காக படம் பார்க்க போன ரசிகர்களுக்கு புதிய பாலாஜியை பார்க்க நேரிட்டாலும் இந்த கேரக்டரையும் அவர்கள் ரசிக்கவே செய்யும் வகையில் ரன் பேபி ரன் உள்ளது .
