Thursday, April 23

‘மெய்ப்பட செய்’ திரைப்பட விமர்சனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது. இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டுஅந்த ஊரை விட்டு வெளியேறி சென்னையில் வாடகைக்கு வீட்டில் தங்குகிறார்கள்.காதல் தம்பதியினர்களுக்கு துணையாக நாயகனின் மூன்று நண்பர்களும் உடன் இருக்கிறார்கள் காதல் தம்பதியினர் தங்கியுள்ள வீட்டினால் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டால் போதும் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள் பிறகு அதை எதிர்த்து நின்று போராடுவதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்வதுதான் ‘மெய்ப்பட செய்’படத்தின் கதை.

கதையின் நாயகனான அறிமுக நடிகர்ஆதவ் பாலாஜி நடித்துள்ளார் இது அவருக்கு முதல் படம் போலின்றி காதல், சென்டிமெண்ட் மற்றும் சண்டைக்காட்சி என அனைத்திலும் நன்கு நடித்து தன திறமையினை மெய்ப்பித்துள்ளார் .கதையின் நாயகி மதுனிகா தன்னுடைய அழகான தோற்றபொலிவாலும் , நேர்த்தியான நடிப்பாலும் தனி கவனம் பெறுகிறார்.

நாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி.ஆர்.தமிழ் செல்வம், ஆரம்பத்தில் அடாவடி வில்லனாக வந்து , இறுதியில் நல்லவனாக மாறிவிடுகிறார். இவரது தோற்றம் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு நன்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது . கட்ட கஜா என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் ஜெயபாலின் தோற்றமும், வசன உச்சரிப்பும் அவர் ஏற்ற கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருந்தது

ஓ.ஏ.கே.சுந்தர், சூப்பர் குட் சுப்பிரமணி, ராஜ்கபூர்,பெஞ்சமின், பயில்வான் ரங்கநாதன்,ராகுல் தாத்தா,மற்றும் நாயகனின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற வகையில் சரியான பங்களிப்பை வழங்கியி ருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல் அவர்களின் கேமரா கோணங்கள் பாடல் காட்சிகளை ரசிக்கும்படியும், சண்டைக்காட்சிகளை மிரட்டலாகவும் பதிவு செய்துள்ளது, இசையமைப்பாளர் பரணியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் குறையில்லாமல் படத்தின் கதையினூடே பயணிக்கிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கொடுப்பதோடு, மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படமாகவும் , குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?என்ற தீர்வையும் சொல்லும் விதமான கதைகளத்துடன் சிறப்பானகாட்சி அமைப்புகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் இயக்குநர் வேலன் அனைவரும் பார்க்கும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளர்.

மொத்தத்தில்,அனைவரும் பார்க்க வேண்டிய படம்‘மெய்ப்பட செய்’.

Spread the love