Sunday, April 19

V3-விமர்சனம்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு (ஆடுகளம் நரேன்) என்பவருக்குஇவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அவர்களில் விந்தியா(பாவனா) ஒருவர், மற்றொருவர் விஜி(எஸ்தர் அனில்). ஒரு நாள் விந்தியா நேர்முக தேர்வு ஒன்றை வெளியூர் சென்று முடித்துவிட்டு திரும்பி வரும்போது ரயில் நிலையத்தின் அங்கேயிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இரவில் வீடு திரும்பும் போது அவரை ஐந்து பேர் சேர்ந்த ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்கிறது.இந்தக் பாதக செயலை செய்த 5 பேர் இவர்கள்தான் என்று அவர்களை கைது செய்யும் போலீஸார் என்கவுண்ட்டரில் அவர்களை கொலையும் செய்கிறது.ஆனால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் உண்மையில் அப்பாவிகள் என்றும், அவர்களுக்கும் இந்தச் சம்பவத்திற்க்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் காவல் நிலையத்தில் கதறி அழுது முறையிடுகிறார்கள்,இந்த என்கவுண்ட்டர் பற்றிய உண்மைகளை அறிய மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவகாமி(வரலட்சுமி சரத்குமார்)யின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது பாலியல் பலாத்காரம் மற்றும் என்கவுண்ட்டர் ஆகிய இந்த இரண்டு சம்பவங்கள் பற்றியும் அந்த குழு விசாரணை நடத்துகிறது இறுதியில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதுதான் இந்த ‘V-3’ படத்தின் மீதிக்கதை.

சிவகாமியாக நடித்திருக்கும் வரலட்சுமி கதையின் நாயகியாய் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார் , ஒரு நடுத்தர குடும்பத்து தகப்பனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் பாவனா (விந்தியா) மற்றும் எஸ்தர் அனில் (விஜி)போன்றவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி நன் முறையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சிவபிரபுவின் ஒளிப்பதிவும் மற்றும் ஆலன் செபாஸ்டியன் இசையும் , படத்தின் கதையோட்டத்துக்கு வலு சேர்த்துள்ளது .உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியான திரைக்கதையுடன் இளைஞர்களை கவரும் வகையில் இந்த V3 படத்தை இயக்குனர் அமுதவாணன் உருவாக்கியுள்ளார் .

Spread the love