Thursday, April 23

’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ – விமர்சனம்

கல்லூரியில் படிப்பை முடித்த கதையின் நாயகனுக்கு(ஸ்ரீ ) வேலை கிடைக்காமல் போகவே தனக்கு கிடைத்த சிறிய வேலைகளை செய்து வரும்போது, ஒரு பெரிய செல்வந்தரான பெரியவர் ஒருவரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கர் வேலைகிடைக்கிறது அந்த வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் அவர், உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர் விஞ்ஞானி என்றும், அவர் கண்டுபிடித்த மருந்தை ஏராளமாக பணம் கொடுத்து வாங்க பலர் வாங்க தயாராக இருப்பதையும் அறிந்துக்கொண்டு அந்த மருந்துகள் அனைத்தையும் கைப்பற்றி சம்பாதிக்கும் வேலையில் அவரிடமுள்ள பணத்தை பறிக்க அதே வீட்டில் வீட்டு வேலை செய்யும் வசுதா கிருஷ்ணமூர்த்தியும் திட்டமிடுகிறார். இவைகள் மட்டுமின்றி அந்த விஞ்ஞானியின் மருந்து பார்முலாவை கைப்பற்ற மருத்துவரான சாம்சும் திட்டமிடுகிறார். இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் நாயகனின் நிலை என்ன ? அதன் பிறகு அங்கு என்ன நடந்தது? என்பதை அறிந்துகொள்ளும் ஆவலை பூர்த்தி செய்கிறது ‘புரொஜக்ட் சி – சாப்டர் 2’.படத்தின் மீதி கதை…

வித்தியாசமான நடிப்பில் நடிகர் சாம்ஸ் நடிப்பில் அசத்தியுள்ளார் ,சரியான வேலை கிடைக்காமல் சிரமப்படும் இளைஞனாக நடித்திருக்கும் ஸ்ரீ, கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மை உணர்ந்து நன்கு நடித்துள்ளார் , வசுதா கிருஷ்ணமூர்த்தி . விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கும் ராம்ஜி, இவர்களின் நடிப்பும் நன்கு வெளிப்டுத்தப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் சிபு சுகுமாரன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சதிஷ் ஆனந்தின் ஒளிப்பதிவும் படத்தின் கதைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

சார்க் பின் ஸ்டுடியோஸ் (Shark Fin Sttudios) நிறுவனம் சார்பில் ஸ்ரீ தயாரித்திருக்கும் படம் ’புரொஜக்ட் சி – சாப்டர் 2’ (Project C – Chapter 2). இந்த படத்தை இயக்குநர் வினோ,இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு ஒரு தரமான படமாக கொடுத்துள்ளார் .

Spread the love