இந்த conceptல பல படங்கள் வந்து இருந்தாலும் எப்பவும் நடை முறைக்கு ஒத்துப்போற கருதான் ..இந்த படத்தோட கதை, எந்த அளவுக்கு ரசிக்கும்படியாகவும், சிந்திக்கும்படியாகவும் சொல்லப்படுகிறதோ அந்த கதை வெற்றிஅடையும் ,உடன்பாலும் அதில் உள்ளடங்கும்…. கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்கிற சூழ்நிலையில இருக்குற அண்ணன் தங்கச்சி …தங்களோட பிரச்சனை தீர வீட்டை வித்துடலான்னு அப்பா(சார்லி )கிட்ட சொல்லுறாங்க அதுக்கு அவர் முடியாதுனு சொல்லிட்டு போறாரு..அதை மறுக்கும் அப்பா வழக்கமாக செல்லும் ஒரு complexக்கு செல்கிறார்..அங்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த complex இடிந்து விழுந்துடிச்சினு பிளாஷ் நியூஸ் வருது…அந்த நியூஸில இறந்தவங்க குடும்பதுக்கு 20 இலட்சம் தருவதாக அரசாங்கம் அறிவிக்குது …….தங்களோட அப்பா அந்த விபத்துல சிக்கிடாருன்னு நினச்சு வருத்தப்படுறதா, இல்ல வரபோற பணத்தை எப்படி பங்கு போடுறதான்னு நினைக்கும் பசங்க ஒரு முடிவு பண்ணுறாங்க ..கடைசில இவங்க அப்பா உயிரோட வந்து நிக்க . அவரோட மூணு பசங்களும் என்ன செஞ்சாங்கன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு ஆர்வமா இருக்கா ? அப்படின்னா.. உணர்வுபூர்வமான அந்த கிளைமாக்ஸை, உடன்பால் படத்துல பார்த்து தெரிஞ்சுகுங்க ….
நகைச்சுவை நடிகராக பல படங்களில் நமக்கு நடிகர் சார்லி அறியப்பட்டு இருந்தாலும் சில படங்களில் அவரது குணச்சித்திர நடிப்பையும் நாம் பார்த்து ரசித்து இருக்கிறோம் அனால் அந்த படங்களைவிட இந்த படத்தில் அவருக்கு தன்னுடைய தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்
சார்லின் மூத்த மகனாக லிங்கா, அவரது மனைவியாக அபர்நதி, சார்லின் மகளாக காயத்ரி, அவரது கணவனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா,தம்பியாக வரும் தீனாபோன்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை மிகை இல்லாமல் வெளிபடுத்தி நன்கு நடித்துள்ளார்கள்

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும், சக்தி பாலாஜியின் பின்னணி இசையும், கதைக்கும், காட்சி அமைப்புக்கும் வலு சேர்த்து ,கார்த்திக் சீனிவாசனின் இயக்கத்துக்கு பக்கபலமாய் உள்ளது,ஆஹா தமிழ் ஒரிஜினலாக இந்தப் படத்தை தயாரித்திருக்கும் கே.வி.துரைக்கு பாராட்டுகள்.
உடன்பால் – சிந்திக்க வைக்கும் மெசேஜ் உடன் சிறப்பான குடும்பப்படம்.
