Thursday, April 23

‘வரலாறு முக்கியம்’- விமர்சனம்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “.

யூடியூப் சேனல் வைத்து இருப்பவர் ஜீவா,ஆசிரியரான அவரது அப்பாவாக கே.எஸ். ரவிக்குமாரும், அம்மா சரண்யா பொன்வண்ணனும் அவருடன் உள்ளர்கள் . கேரளாவில் இருந்து அக்கா தங்கைகளான் காஷ்மீரா மற்றும் பிரக்யா குடும்பத்துடன் அதே தெருவில் வந்து குடியேறுகிறார்கள் ,காஷ்மீராவின் தந்தை தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கே திருமணம் செய்து கொடுப்பேன் என உறுதியுடன் இருக்கிறார். ஜீவா காஷ்மீராவை ஒருதலையாக காதலித்து பிறகு பின்னர் இருவருமே காதலிக்க ஆரம்பிக்கின்றார்கள் அதன்பின்னர் நடந்தது என்ன? அவர்கள் காதல் நிறைவேறியதா?என்பதை ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக சொல்லி இருப்பதுதான்வரலாறு முக்கியம் படத்தின் கதை .

கலகப்பான பக்கத்து வீட்டு பையன் போன்றதொரு கதாபாத்திரம் என்றால் நடிகர் ஜீவாவிற்கு மிகவும் பொருத்தமாய் அமைந்துவிடும் அதே போன்றதொரு கேரக்டரில் அசால்ட்டாக நடித்துள்ளார் ஜீவா ,.SMS படத்திற்கு பிறகு மீண்டும் அதே [போன்ற கலகலப்பான கதாபாத்திரத்தில் நிறைவாய் அவர் நடித்துள்ளார்.

கதாநாயகி காஷ்மிராஅழகான தோற்றத்திலும் இயல்பான நடிப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் மற்றும் பிரக்யாவும் தன பங்குக்கு குறையில்லாமல் நன்றாக நடித்துள்ளார். வேறு படங்களில் வேறு பல நடிகர்களுடன் கட்ய கூட்டணி வைத்து அசத்தியிருந்த விடிவி கணேஷ்இந்த படத்தில் ஜீவாவுடன் கை கோர் த்து செய்துள்ள காமெடி கலாட்டாகள் ரசிக்கும்படி உள்ளது. கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் போன்றோர் வழக்கமான தங்களது இயல்பான நடிப்பை தந்து தாங்கள் நடிக்கும் பாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் N.B.படத்தொகுப்பும் இயக்குனர் சந்தோஷ் ராஜனின் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரான ஷான் ரஹ்மான் (‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ்) இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன .

ரொமான்ஸ் ,காமெடி என முழுவதும் நிறைந்த கம்ர்ஷியல் திரைப்படமாக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

Spread the love