Thursday, April 23

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்- விமர்சனம்

எண்ணற்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் ஒரு சில படங்களில் நாயகனாயும் தன்னுடைய தனிப்பட்ட உடல்மொழியாலும் , வசன உச்சரிப்பாலும் ஏராளாமான ரசிகர்களை கொண்டுள்ள வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மீண்டும் மைய நாயகனாய் களம் இறங்கி உள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

பணக்கார வீட்டு நாய்களை கடத்தி அதன் உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘ கடத்தல் மன்னன் நாய் சேகராக வடிவேலு நடித்திருக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், நாய்களை கடத்தும் நாய்சேகர் , ரௌடி ஒருவரின் நாயைக் கடத்துவதால் வம்பில் சிக்கி க்கொள்கிறார். அதன் பின்னர் தன்னுடைய சொந்த நாயையே ஒருவர் கடத்தி வைத்திருப்பத்தை அறிந்து அந்த நாயை மீட்டு கொண்டு வர கிளம்புகிறார்,இறுதியில் தந்து சொந்த நாயை அவர் மீண்டும் மீட்டு, எப்படி கொண்டு வந்தார்.என்புதுதான் படத்தின் எஞ்சிய கதை.பல பவருடங்களாய் திரையில் பார்க்கமுடியாத வைகைபுயலை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாய் காத்திருந்த ரசிகர்களுக்கு அவரது மறுபிரவேசம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

படத்தில் வைகைபுயலின்அறிமுக காட்சி மிகவும் ரசிக்கும் வகையில் உள்ளது .இடைப்பட்ட காலத்தில் மீம்ஸ்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த வைகைப்புயல் மீண்டும் திரையில் களம் கண்டுள்ள படம்,அதுவும் இயக்குனர் சுராஜுடன் இணைந்து தன் அடுத்த நகர்வை அவர் துவக்கியுள்ள படம் இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

இந்த படத்தில் ஆனந்தராஜ், வடிவேலுவின் புதியகூட்டணி ரசிக்கும்படி உள்ளது , வடிவேலுக்கு பிறகு படத்தில் நன்றாக ஸ்கோர் செய்துஇருப்பது ஆனந்தராஜ் என்று சொல்லலாம், முனிஷ் காந்த், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், மனோபாலா, பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி ராவ் ரமேஷ் லொள்ளு சபா சேஷூ என, படத்தின் மற்ற கேரக்டர்களும் தங்கள்து கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளார்கள்

படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களில் வடிவேலு குறிப்பிட்டு சொல்லியிருப்பதை போலவே இசைஅமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் ஒரு வடிவேலு ரசிகராகவே இந்த பபடத்தில் பணிபுரிந்துள்ளார், அவரது பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாக உள்ளது ,ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசுவும் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கேவும் , முழுவதும் காமெடி ஜானரில் பயணிக்கும் படத்திற்கு தேவையான தங்களுடைய பணிய செவ்வனே செய்துள்ளார்கள் .

நீண்டஇடைவேளைக்குப்பிறகு வடிவேலுவை திரையில் பார்த்து ரசிக்க விரும்பும் ரசிகர்களை இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் நிச்சயம் கவரும் .

Spread the love