Monday, April 27

’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் விமர்சனம்

வெலோனி என்ற இளம்பெண்மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். அந்த கொலையை செய்தது யார்? ஏன்? என்பதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா பொறுப்பேற்கிறார் அவரது விசாரணையில் பல மர்மங்கள் நிறைந்த திருப்பங்கள் கிடைக்கின்றன விசாரணையை ஒரு கட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விட்டு விட எஸ்.ஜே.சூர்யா, அதனை மறுத்து தனி ஒருவனாக உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கும் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபடுகிறார் கடைசியில் அவர் உண்மை குற்றவாளிகளை இனம் காணும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ,’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. தொடரின் எஞ்சிய கதை .

தொடரின் மைய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்ஜே சூர்யா உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் நபராக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.சமீபகாலங்களில் வெள்ளித்திரையில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலமாக ரசிகர்களை கைவிரித்து வரும் S .J சூர்யா அவர்கள் கள் இந்த தொடர் மூலம் சீரிஸ் பக்கமும் தன நடிப்பின் எல்லையை விரிவுபடுத்திள்ளார்

வெலோனி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சனா நடித்துள்ளார் மிகவும் இயல்பான நடிப்பில் கேரக்டருடன் ஒன்றி நடித்துள்ளார் வெலோனியின் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் லைலா, ஆங்கிலோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில் அம்மாவாக நடித்துள்ள லைலாவின் நடிப்பில் அனுபவ முத்திரை மிளிர்கிறது தொடர்ந்து பல படங்களில் இவரை இனிமேல் காண முடியும் என்று தோன்றுகிறது,மற்றும் விவேக் பிரசன்னா எஸ்.ஐ, கதாபாத்திரத்திலும், நாசர் எழுத்தாளர் கதாபாத்திரத்திலும், மேலும் ஹரிஷ் பெராடி,ஸ்மிருதி வெங்கட்,குமரன் தங்கராஜன் போன்றவர்களும் இயல்பான நடிப்பை தந்துள்ளார்கள்.

எட்டுபாகங்கள் கொண்ட தொடரில் கதாபாத்திரங்களுக்கேற்ற கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து இறுதி பா,கம் வரை சஸ்பென்ஸ் உடன் எதிர்பார்ப்புகளை எகிறவைத்து கதையினை விறுவிறுப்புடன் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.இவரது கதைசொல்லும் நேர்த்திக்கு சிறப்பான காட்சிவியலை தந்துள்ள சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும் , சைமன் கே கிங் கின் பின்னணிஇசையும் பக்கபலமாய் நின்று பெரும் பங்களிப்பை தந்துள்ளன. அமேசான் பிரைம் வீடியோவின் இந்த தமிழ் திரில்லர் தொடரை புஷ்கர்-காயத்ரி ஆண்ட்ரூ லூயிஸுடன் படைத்துள்ளார்கள் ,

தொடர் ரசிகர்களும் ஸ்பென்ஸ் திரில்லர் கதை ரசிகர்களும் பார்க்க சரியான விருப்பதேர்வாக இந்த வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. தொடர் நிச்சயம் அமையும் .

Spread the love