Tuesday, September 8

*நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்*

*செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் புதுமுகங்களின் ‘கோல்ட் கால்- Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

புதுமுக நடிகர்கள் சித்து மூலி மணி- ஸ்ரீ வைஷ்ணவ் -சந்தோஷ் – கிருஷ்ணா விஜய் – ஆகிய நான்கு அறிமுக கலைஞர்கள் கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கோல்டு கால் – Cold Call’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் தம்பிதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோல்டு கால்’. இதில் சித்து மூலி மணி, ஸ்ரீ வைஷ்ணவ், சந்தோஷ், கிருஷ்ணா விஜய் , ஸ்ரீகாந்த், பாலாஜி ராஜசேகர், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. என். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் கிரிதரன் இசையமைத்திருக்கிறார். சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாக்த்ரோ என்டர்டைன்மெண்ட் – Walkthrough Entertainment நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேசவ மூர்த்தி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

எதிர்வரும் 18 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் சந்தையில் அறிமுகமாகும் பொருட்களை விற்பனை செய்யும் தமிழ் நாடு – கேரளா – ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த நான்கு தென்னிந்திய விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை நகைச்சுவையாக விவரிப்பதும்.. இவர்களின் காதல்- மோதல்- காமெடி- ஆக்சன் – ஆகியவை இடம் பிடித்திருப்பதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

தற்போது இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love