Sunday, August 2

*‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !*

*‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் ‘அட் ராசிட்டி’ யான ஃபர்ஸ்ட் சிங்கிள் !*

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அட்ராசிட்டி’ (Atrocity) வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது

யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி விஷால், வெங்கயோ குரல்களில் உருவாகியுள்ள இந்த பாடல், இளமையும் உற்சாகமும் கலந்த காதல் பாடலாக அமைந்துள்ளது. துள்ளலான இசை, கவர்ச்சிகரமான காட்சியமைப்பு மற்றும் நாயகன்-நாயகியின் இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மாடர்ன் கல்யாணத்தின் அனைத்து ‘அட்ராசிட்டி’ (Atrocity) விசயங்களையும் நகைச்சுவை ததும்ப காட்சிப்படுத்தியிருக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியால், கணவரே மனைவியின் வீட்டிற்குச் சென்று வாழும் புதிய கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் உறவுகளின் உணர்வுகளை வித்தியாசமான கோணத்தில் சொல்லவுள்ளது.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காதல், குடும்பம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை தனது இசையின் மூலம் மேலும் அழகாக வெளிப்படுத்தும் வகையில் பாடல்களும் பின்னணி இசையும் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முதல் சிங்கிள் ‘அட் ராசிட்டி’ வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்தும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு தொடங்கும் எதிர்பாராத திருப்பங்களையும், கலகலப்பான குடும்ப தருணங்களையும் சுவாரஸ்யமாக சொல்ல வரும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

Spread the love