Tuesday, July 14

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் ” welcome to wildlife ” கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திருடன் போலீஸ், தெலுங்கில் சந்தீப்கிஷன் நடித்த நினு வீதனி நீ தானு நேனே ‘Ninu Veedani Needanu Nene’, சமீபத்தில் வெளியான சிங்கிள் ‘Single’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் ராஜு இந்த படத்தை இயக்குகிறார்.

பிரமாண்டமான பான் – இந்தியா படமாக தயாராகிவரும் இந்த படத்தை KVK Productions சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் கீதா சிவராஜ்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

இந்த போஸ்டரில் சிவராஜ்குமார் இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில், இளமையான கெட்டப்பில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Spread the love