சாமியையும் சாதாரண குடும்பத்தையும் இணைத்து கிடைத்த வெற்றியின் நம்பிக்கையில் இம்முறை சாமியையும் சட்டத்தையும் இணைத்து தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கும் படம் கருப்பு.

60 சவரன் நகையினை எடுத்துக்கொண்டு கேரளாவில் இருந்து இந்திரன்ஸ் தன்னோட மகள் அறுவை சிகிச்சைக்காக ட்ரெயின்ல சென்னைக்கு வராரு. வழி தெரியாமல் இறங்க ,திருடர்களால 60 சவரன் நகையும் கொள்ளை போகுது. மகளையும் கூட்டுக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போற இந்திரன்ஸ் எப்பயாவது நகையை கண்டுபிடிச்சு கொடுக்கணும்னு கெஞ்சுறாரு. 60 சவரன் நகை என்று சொன்ன உடனே அதிரடியாக போலீஸ் களத்துல இறங்குது திருடர்களை கண்டுபிடிச்சு, நகைகளையும் மீட்கடும்போது 60 சவரன் நகையில் 45 சவரன் நகைதான் கிடைச்சதுன்னு பொய் சொல்றாங்க, அதையும் கோர்ட்டு மூலமாக தான் கொடுக்க முடியும்னு வக்கீலை தேடி போக சொல்றாங்க. அதனால கோட்டுக்கு போற இந்திரன்ஸ், வில்லங்கமான வக்கீல் ஆர்ஜே பாலாஜி கிட்ட போய் உதவி கேக்குறாரு. அவரை எப்படியாவது ஆட்டைய போடணும்னு முடிவு பண்ற பாலாஜியும் அவருடைய டீமும் வாய்தா வாங்கி வாங்கியே அவர்கிட்ட இருந்து இருக்கிற பணத்தை எல்லாம் வாங்கி சாப்பிட்டு அழிக்கிறாங்க. நகையும் திருப்பி கிடைக்காமல், இருந்த காசு செலவாகிக் கொண்டிருக்க, எப்படியாவது நகைகள் கிடைச்சு மகளுக்கு ஆபரேஷன் பண்ணி விடலாம் நம்பிக்கையோடு இருக்கிறார் இந்தரன்ஸ் ,ஆனா தன்னை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்து ,கோர்ட்க்குள் இருக்குற கருப்புசாமி கோயிலில் போய் தனக்கு நீதி வேண்டும் அவர் கேட்கிறார். கடவுளான சூர்யா கருப்பு கோட்டை போட்டுட்டு வக்கீலாக ஆஜராகுறாரு. நேர்மையான வக்கீலா இருக்கிற திரிஷாவும் அவர் கூடவே துணையாய் இருக்கிறாங்க ,இந்த சூழ்நிலையில சாமிகிட்டே சபதம் போடுறாரு ஆர். ஜெ. பாலாஜி. அவருக்கு கொடுத்த சத்தியத்திற்காக தன்னோடு சக்தியை பயன்படுத்தாமல் சாதாரண மனுஷனாக வாதாடி ஒரு வழியா நகைகள் இந்திரன்ஸ்க்கு கிடைக்குது ,ஆனால் ஹாஸ்பிடல் சேர்த்த அவருடைய மகள் இறந்து போயிடறாங்க. மகளை எப்படியாவது காப்பாத்திடலாம்னு நம்பிக்கையோடு இருந்த இந்திரன்ஸ் மட்டுமில்லாமல் மனிதனாய் இருந்த கருப்பு சாமியும் மனிதர்களாலே தோற்று போகிறார். திரிஷா அவர சமாதானப்படுத்தி சாமியாக இருக்க சொல்றாங்க. மீண்டும் கருப்பனாக வரும் சூர்யா, ஆர் ஜே பாலாஜியின் அட்டூழியங்களையும் ,அராஜகங்களையும் தட்டிக்கேட்பதோடு நீதிமன்றத்தையும் தன்னோட கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கணும்னு நினைச்ச அவரை கருப்புசாமியா என்ன செஞ்சாரு ,அநீதி இழைக்கப்பட்ட பலருக்கும் நீதி எப்படி கிடைத்தது? என்பதுதான் கருப்புவின் மீதி ஆட்டமாக திரையில் மிளிர்கிறது
படத்தோட ஹீரோ சூர்யா அரை மணி நேரத்திற்கு பிறகு தான் entry கொடுக்கிறார். வந்தவுடனே ஆக்ரோஷமா, அதிரடியான ஆட்டத்தை ஆரம்பிப்பார்என்று எதிர்பார்த்தா, சாமியா இருந்தாலும் சாந்தமா போய் சாமானியன் கிட்ட தோற்பதும், இரண்டாம் பாதியில் அப்படியே முற்றிலும் மாறுபட்டு கருப்பு சாமியா தன்னுடைய எல்லைக்குள் ஆக்ரோஷமா அமர்ந்து, அநீதியை தட்டிக் கேட்கிற மாஸ் ஹீரோவாக மாறும் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு கருப்புயாக வந்து கறி விருந்து போட்டு இருக்கிறார்.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் இந்திரன்ஸின் நடிப்பு நம்மளுடைய மனதை கனமாக்கி தமிழ் சினிமாவிலும் அழுத்தமான ஒரு தடத்தை அவர் பதிப்பார் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கு .மேலும் த்ரிஷா, சிவதா, நட்டி, சுவாஷிகா, சுப்ரீத் ரெட்டி, வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், நமோ நாராயணாஎன் பலரும் அவரவர் கதாபாத்திரைங்களில் குறைவில்லாத நடிப்பை கொடுத்துள்ளார்கள்

படத்தில் இடம் பெற்று இருக்க கூடிய வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் சிறப்பாக உள்ளன”கடவுளா நினைச்சு நீதி கிடைக்கும் என்று கோர்ட்டுக்கு வற்வங்கள திருப்பி கோயில் வாசல் நிக்க வச்சா என்ன நடக்கும் ” என்னும் கருத்தை வசனங்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் அழுத்தமா சொல்லி இருக்கிறத பாராட்டலாம். ஆனால் இந்தப்படம் சமூகத்திற்கான படமா? சீரியஸ் ஆன படமா? இல்லை காமெடி படமா? இல்ல ஆக்சன் படமா? என்ற எந்த வரையறைக்குள்ளும் சென்று விடாத திரைக்கதையும், சில இடங்களில் ஏத்துக்க மறுக்கிற விஷயங்களை நகைச்சுவையும் சரி செஞ்சிருக்கு. ஒரு சீரியஸான, கோர்ட் என்னோட கோர்ட்டு, என்னோட கோட்டை சொல்றத விட, அவர் கைவிட்ட கேஸை யாரும் எடுக்க முடியாத அளவுக்கு அவர பார்த்து பயப்படுகிற பேபி கண்ணன் கதாபாத்திரத்தை உருவாக்கிய ஆர் .ஜெ .பாலாஜி, அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதில் இன்னமும் கொஞ்சம் கவனமாக கையாண்டு இருந்தால் அது ரசிகர்களிடம் முழுமையாக ஒன்றி போயிருக்கும். இருந்தாலும் சாமி கதைக்குள் ஒரு நீதிக் கதையை சொல்லி சாமானிய மனிதனுக்கு ஏற்படும் அவலங்களை கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் சொல்லி இருக்கிற ஆர் ஜே பாலாஜிக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு என்னவாக இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம் மொத்தத்தில் கருப்பு நீதிப் போராட்டம்.
சாய் அபயங்கரின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை நன்கு கொடுத்துள்ளது, பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன .ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ,நேர்த்தியான கோணங்கள் மற்றும் ஒளிஅமைப்பின் வாயிலாக குறிப்பிட்டு சொல்லக்கூடிய அம்சமாக இந்தப்படத்தில் அவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
படத்தை இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி , சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து திரை ரசிகர்களுக்கும் ஏற்ற நல்லதொரு சம்மர் விஷுவல் ட்ரீட் ஆக படத்தினை உருவாக்கியுள்ளார் என்றே சொல்லலாம்.
சட்டமும் சாமியும் இணைந்த படம் கருப்பு.
