இரண்டு இளம் கதாபாத்திரங்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிறைந்த ரொமான்டிக் திரில்லர்தான் இந்த படம்.
மினிஸ்டரா இருக்கிற மீனாட்சியின் அப்பா தன்னோட தலைவருக்கு மகளையே இரண்டாவது தாரமாக கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முயற்சி செய்றாரு ,இது எதிர்க்கிற அவருடைய மனைவியை அவர் கொலை பண்ணிடுறாரு. யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் மீனாட்சி வீட்டை விட்டு வெளியே வராங்க. அவங்களுடைய பாய் பிரண்டு ஆதரவு தராரு,ஆனா அவருடைய கோடிக்கணக்கான பணத்துக்கு ஆசைப்பட்டு அவங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரு, இதனால ரெண்டு பேருக்கும் இடையில சண்டே ஏற்படுது .ஒரு கட்டத்துல யாருமே இல்லாம நிர்கதியா நிக்கிறாங்க மீனாட்சி. இது ஒரு பக்கம் இருக்க, ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்த ஜெய் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாரு , அவர் கூட யோகி பாபு ,ஆதித்யா கதிர் எல்லாம் கூட வேலை செய்றாங்க, ஒரு காபி ஷாப்ல மீனாட்சிய பாக்குற ஜெய் இப்படிப்பட்ட ஒரு பொண்ணைத்தான், தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறாரு ,ஆனா அடுத்த நாளே பப்ல ஃபாய் பிரண்ட் கூட மீனாட்சியை பார்க்க அவங்களுடைய அறிமுகம் கிடைக்கிறது. அடுத்த நாளும் மீனாட்சிக்கும் அவருடைய பிரண்டுக்கும் சண்டை ஏற்பட, அந்த இடத்துக்கு வர ஜெய் கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாங்க மீனாட்சி. உடனே ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குது ,அடுத்த நாளே ஹனி மூனுக்கு கொடைக்கானல் போறாங்க, போன இடத்தில எதிர்பாராமல் நடக்குற ஒரு சம்பவதால க ஜெய்,கருடா ராம் கிட்ட மாட்டிக்குறாரு. அதிர்ச்சி அடைஞ்சு மனமுடைந்து போற ஜெய், மீனாட்சி கிட்ட சரியா பேசாம இருக்காரு. இவங்க ரெண்டு பேருக்கும் ஏற்படுற இந்த இடைவெளியை பயன்படுத்திக்கிட்டு மீனாட்சியின் ஃபாய் பிரண்ட் ரெண்டு பேரையும் நிரந்தரமா பிரிக்கணும்னா நினைக்கிறாரு. இன்னொரு பக்கம் மினிஸ்டரா இருக்கிற மீனாட்சியின் அப்பா மகளை கண்டுபிடிக்க முயற்சி பண்றாரு. அழகான வாழ்க்கை ஆரம்பமாக போகிறதுன்னு நம்பிக்கையோடு இருந்த தம்பதிகளுடைய வாழ்க்கையில எதிர்பாராமல் நடந்த சம்பவம் என்ன? அதனால ஏற்படற பாதிப்புகள் என்ன? ஜெய்யை கொலை செய்யணம்ன்னு கருட ராம் முயற்சி பண்ண, இன்னொரு பக்கம் மீனாட்சியின் அப்பா மற்றும் ஃபாய் பிரண்டோட எண்ணம் நிறைவேறுச்சா? ரெண்டு பேருக்கும் விவாகரத்து நடந்ததா? இப்படி பல தரப்பட்ட கேள்விகளுக்கு விடையாக திரைக்கதை அமைந்து படம் முடிவடையுது.
ஜெய் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி, வழக்கம் போலவே நடிச்சிருக்காரு. குறிப்பா தான் யார் என்று மீனாட்சி கிட்ட சொல்லும் போது அவருக்கு மட்டுமே வைக்கப்படுற குளோசப்பில் அவ்வளவு அழகாக வெகு யதார்த்தமாக நெகிழ்ச்சியாக ஜெயின் நடிப்பு அமைந்துள்ளது எதிர்பாராத ஒன்று. அதேபோல தளபதியின் ரசிகராக, பல இடங்களில் அவரைப் போலவே பேசுவதும் ,ஸ்டைலாக நடிப்பது பார்க்கும்போது ,நாம என்ன சொல்ல வேண்டுமோ நமக்கு என்ன தோன்றியதோ ,அதை படத்திலேயே யோகி பாபு சொல்லி இருப்பது கலக்கல். இந்த படம் ஜெய்யின் திரை பயணத்தில் சட்டென்று மாறும் படமாக அமைய வாழ்த்துக்கள்.

கதாநாயககியாக நடித்துள்ள மீனாட்சி கோவிந்தராஜன், தோற்றத்தில் மட்டும் அழகாக இல்லாம, நடிப்பிலேயும் மிக அழகாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்காங்க. யோகி பாபு இந்தப் படத்துலயும் குறைவில்லாத காமெடியை நிறைவாக செய்து ,காட்சிகளை கலகலப்பாக்கி, படம் முழுக்க பயணித்து ,வணிகத்திற்கும் படத்திற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார் .
மேலும் வில்லனாக நடித்திருக்க்கூடிய கருடா ராம் மற்றும் இதர கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சத்யன், ஆதித்யா கதிர் ,ஸ்ரீமன், சரவண சுப்பையா என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லா வண்ணம் நிறைவான நடிப்பினை கொடுத்துள்ளார்கள் .
இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் ரிச்சர்ட் எம்.நாதன் ,இவரின் கண் வண்ணத்தில் காட்சிகள் நன்கு படமாக்கப்பட்டுள்ளன .கதைக்கும், காட்சிகளுக்கும் தேவையான பின்னணி இசை மற்றும் ரசிக்கும்படியிலான பாடல்கள் என இசை வடிவில் தன்னாலான பங்களிப்பை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் கொடுத்திருக்கிறார்.
படத்தினை இயக்கியிருபவர் பாபு விஜய்,கதைக்கேற்ற நட்சத்திர தேர்வு மற்றும் நல்ல தலைப்பு ,ஒரு வர்த்தரீதியான படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்கள்,அதோடு கூட புதிய இடங்களுக்கு சென்று தங்க கூடிய சூழல்களின்போது ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் ,சட்டென்று வானிலை மாற்றத்துக்கான காரணத்தினை, சஸ்பென்ஸுடன் சொல்லுகிறது .
