எளிய மனிதர்களின் யதார்த்தமான காதலை , புதிய கோணத்தின் வாயிலாக திரைமொழியில் பதிவு செய்துள்ளது இந்த ’29’ படம் .

29 வயசுல கம்ப்யூட்டர் கம்பெனி வேலைக்காக சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞன் விது,அங்க பணி புரியும் ப்ரீத்தி அஸ்ரானிய காதலிக்கிறார். காதலே பிரதானம் அப்படின்னு வாழ்ந்து கொண்டிருக்கிற விதுவும் வாழ்க்கையில காதல தாண்டி லட்சியம் முக்கியம் என்று நினைக்குற ப்ரீத்தியும் பிரியக்கூடிய நிலைமை ஏற்படுகிறது கடைசில அவங்க மீண்டும் ஒன்று சேர்ந்தாங்களா ?இல்லையா? அப்படிங்கறத சொல்றதுதான் 29 படத்தோட மீதி கதை .
இந்தப் படத்தினுடைய கதையின் நாயகனாக சத்யா என்னும் கதாபாத்திரத்தில் விது நடித்திருக்கிறார் ,இவர் ஏற்கனவே ’ரெட்ரோ’ படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர் .இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ,சாதாரணமாக நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இளைஞர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் தன்னுடைய ய தார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் விஜி என்னும் கதாபாத்திரத்தில் பிரீத்தி அஸ்ரானி கதையின் நாயகியாக நன்கு நடித்துள்ளார்,காதல் காட்சிகளிலும், காதலனுடன் ஏற்படும் பிரிவிலும் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் உணர்வுகளை தன் நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தி உள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன். அவினாஷ். சிந்து ஷியாம். ஆதிரா பாண்டியன் லக்ஷ்மி போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணியிசை இசை கதாபாத்திரங்களின் உணர்வுகளை திரைமொழியில் நன்கு வெளிப்படுத்த மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது .அதேபோல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் நேர்த்தியான கோணங்கள் மற்றும் ஒளி அமைப்புகள் வாயிலாக கதாபாத்திரங்களின் வாழ்வியல் சூழல் நன்கு படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் ஒன்றுதான் அனைத்தையும் முடிவு செய்வதில்லை ,அதையும் தாண்டி அவனுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளம் வேண்டும் என்பதை பதிவு செய்யும் விதத்தில் இப்படத்தினை ரத்தினகுமார் அவர்கள் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே மேயாத மான். ஆடை போன்ற படங்களை இயக்கியவர் . சில வருடங்களுக்கு முன்பிருந்த சென்னையின் வாழ்வியலை தன்னுடைய கதாபாத்திரங்களின் வாயிலாக மீண்டும் கண் முன்னே அவர் நிறுத்தி இருந்தாலும் திரைக்கதையில் இன்னமும் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம் என்று தோன்றும் அளவிற்கு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இந்த 29 எல்லா வயதினரும் பார்க்க வேண்டிய படம்.
