Friday, April 17

’காளிதாஸ் 2’ -திரை விமர்சனம்

ஒரு குற்றம்… ஆனால் அதன் பின்னால் புதைந்து கிடக்கும் பல பல உண்மைகள்—அதை கண்டு பிடிக்க முயலும் காவல்துறையின் சவாலான விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது ’காளிதாஸ் 2’

ஏராளமான குடும்பங்கள் வசிக்கும் ஒரு அபார்ட்மெண்ட் சென்னை புறநகரில் உள்ளது அங்கு வசிக்கும் அபர்ணதி – அனந்த் நாக், தம்பதிகளோட 4 வயது பெண் குழந்தை காணாமல் போய் விடுகிறது. காவல்துறை அதிகாரிகள் பரத் மற்றும் பவானி ஸ்ரீ காணமல் போன குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சிகான விசாரணையில்ஈடுபடுகிறார்கள் , அப்போது அதே குடியிருப்பில் வசிக்க கூடிய இளைஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் ஏற்படுகிறது, அவரிடம் விசாரணை சென்றுகொண்டிருக்கும்போதே காணாமல் போன குழந்தைன் பிரேதம் கிடைக்கிறது. ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் வழக்கறிஞர் பிரகாஷ்ராஜ் அஜய் கார்த்தியை மீட்டு தன்னுடன் கூடிக்கொண்டு சென்று விடுகிறார் .காவல்துறையின் விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே மேலும் ஒரு சிறுமி அதே குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழக்கிக்கிறார், இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இந்த கொலைகளை செய்தது யார்? உண்மையான குற்றவாளியை பரத் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சொல்வது தான் ‘காளிதாஸ் 2’.படத்தின் மீதி கதை

காளிதாஸ் என்னும் கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக பரத் நடித்துள்ளார், இந்த கதாபாத்திரத்தில் அவருடைய அனுபவம் நிறைந்த நேர்த்தியான நடிப்பு ,சிறப்பான முறையில் வெளிப்படும் வகையில் அவரது தோற்றமும், நடிப்பும் ஒருங்கே இப்படத்தில் அமைய பெற்றுள்ளது மற்றும் காவல்துறையின் சந்தேகத்திற்கு உட்படக்கூடிய , குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நன்கு நடித்துள்ளார். மேலும் அனுபவ நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஆடுகளம் கிஷோர் மற்றும் அபர்ணதி ஏசியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் .மேலும் இந்த படத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய நடிகையாக பல வருடங்களுக்குப் பிறகு சங்கீதா தமிழ் திரை உலகிற்கு மறுபிரவேசம் செய்திருக்கிறார் .தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு தக்க வகையில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள சங்கீதா தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

எடுத்துக்கொண்ட கதைக்கு ,எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையில் அமைத்து ,திரில்லர் பாணியில் நன்கு படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் செந்தில் ஸ்ரீ. கதை நிகழும் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய சிறப்பான கோணங்கள் மூலம் நன்கு படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா , சாம் சி எஸ் -ன் இசையில் பின்னணி இசை கதைக்கேற்றபடி நன்கு பயணித்துள்ளது படத்தொகுப்பாளர் புவன் சீனிவாசன் காட்சிகளை நன்கு தொகுத்து ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Spread the love