துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபாபாலு மற்றும் பலர் நடித்துள்ள படம்.
கதையின் நாயகன் கலையரசனும் கதையின் நாயகி தீபாவும் தங்களுடைய பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு ஊரில் வசித்து வருகிறார்கள், குலதெய்வ கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக, நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தீபாவாவும் ,கலையரசனும் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள் .அப்படி தங்கள் சொந்த ஊருக்கு செல்லக்கூடிய வழியிலேயே ஏதோ ஒரு நடக்கக்கூடாது செயல் அங்கு நடக்கப் போகிறது என்று தன் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்வதாக கலையரசனுடன் சொன்னாலும் தொடர்ந்து இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள்,ஆனால் அங்கு அவர்களை சுற்றி பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அங்கே நடந்தேறுகிறது ,இந்த இக்கட்டான சூழலில் இருந்து தம்பதியினர் தப்பித்தார்களா?இல்லையா என்பதுதான் ’கொலைச்சேவல்’ படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக காளி என்னும் கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார், கிராமிய சூழலில் நல்ல நேசமுள்ள காதலனாக ,பாசம் உள்ள கணவனாக நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். கதையின் நாயகியாக நடித்துள்ள தீபா பாலு தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு முற்றிலும் பொருத்தமான தோற்றம் மற்றும் நடிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .மேலும் கலையரசனின் நண்பனாக நடித்திருக்க கூடிய பாலசரவணன், கஜராஜ், விஜய் சத்யா அகரன் வெங்கட் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சங்களில் P .G முத்தையாவின் ஒளிப்பதிவு முக்கியமான இடத்தில் உள்ளது ,அவர் கிராமப்புற காட்சிகளை தன்னுடைய நேர்த்தியான கோணங்கள் மூலமாக நிறைவாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் சாந்தன் தன்னுடைய பங்குக்கு ரசிக்கக் கூடிய வகையிலான பாடல்களையும் ,கதைக்கு கதைக்கும்,காட்சிகளுக்கும் இணக்கமான பின்னணி இசையினையும் நன்கு கொடுத்துள்ளார்.

இந்த படத்தை இயக்கியிருப்பவர் வி. ஆர்.துதிவாணன்,அன்பும் பாசமும் மிக்க தம்பதியரின் வாழ்வியலில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை பற்றி கதைக்களத்தை அமைத்து,அதற்குப் பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து, சிறப்பான படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர்.
